Kathir News
Begin typing your search above and press return to search.

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6845 வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6845 வாகனங்கள் பறிமுதல்

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6845 வாகனங்கள் பறிமுதல்

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 April 2020 2:58 PM GMT

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு மீறி வெளியே 6845 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையில் அரசின் உத்தரவை மீறி புதுச்சேரியில் சுற்றிதிறிபவர்களை பிடித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தும் எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். இந்நிலையில் ஊரடங்கு உத்தரவையும் மீறி புதுச்சேரி மாநிலத்தில் 13-வது நாளாக இதுவரை வெளியே சுற்றியதாக, 1426 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சுமார் 6845-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்த போலீசார் வெளியே சுற்றி வருபவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வருகின்றனர்.


நேற்று ஒரு நாள் மட்டும் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். 46 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 484 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.



Next Story