"பிறந்த நாள் கொண்டாட்டமே வேணாம்" என்று சொன்னது எங்க போச்சு? 67 கிலோவில் 'மெகா சைஸ்' கேக் - அதாகளப்படுத்திய தி.மு.கவினர்!
"பிறந்த நாள் கொண்டாட்டமே வேணாம்" என்று சொன்னது எங்க போச்சு? 67 கிலோவில் 'மெகா சைஸ்' கேக் - அதாகளப்படுத்திய தி.மு.கவினர்!

பேராசிரியர் அன்பழகன் உடல்நலக் குறைவாக இருப்பதால், எனது பிறந்த நாளை கொண்டாட விரும்பவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்த நிலையில் அக்கட்சி தொண்டர்கள் மெகா சைஸ் கேக் வெட்டி கொண்டாடி இருப்பது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 68-வது பிறந்தநாள் ஆகும். இதுதொடர்பாக தி.மு.க. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடித வடிவிலான அறிக்கையில், 'தி.மு.க. பொதுச்செயலாளரும், எனது பெரியப்பாவுமான க.அன்பழகன் வயது முதிர்வின் காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் உடல் நலிவுற்று இருக்கும் இந்த சூழலில் நான் எனது பிறந்தநாளை கொண்டாடும் மனநிலையில் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, கட்சியின் முன்னணி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் என் மீது அன்பு கொண்ட நண்பர்கள் யாரும் மார்ச் 1-ந் தேதி (நேற்று) என்னை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்ல வரவேண்டாம்' என்று கூறி இருந்தார்.
திமுக எம்.எல்.ஏ இறப்பு, அன்பழகன் உடல்நலக் குறைவு என்று பல சோகங்கள் சூழ்ந்த நிலையில், வாயளவில் மட்டுமே பிறந்த நாள் கொண்டாட்டம் வேண்டாம் என்று சொன்ன ஸ்டாலின், தொண்டர்கள் வைத்து வெகு விமர்சியாக கொண்டாடியுள்ளார். மு.க.ஸ்டாலினின் 67வது பிறந்தநாள் என்பதால் 67 கிலோ எடைக்கொண்ட பிரம்மாண்டமான கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளார் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி. அதே போல திருவாரூரில், 67 கிலோ கேட் வெட்டி கொண்டாடப்பட்டது.