Kathir News
Begin typing your search above and press return to search.

சிவகார்த்திகேயனின் செல்லமா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வெற்றி சாதனை.!

சிவகார்த்திகேயனின் செல்லமா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து வெற்றி சாதனை.!

சிவகார்த்திகேயனின் செல்லமா பாடல் 7 மில்லியன்  பார்வையாளர்களை கவர்ந்து வெற்றி சாதனை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  21 July 2020 11:32 AM GMT

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் திரைப்படத்தில் ஒன்று 'டாக்டர். இந்த படத்தினை கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சன் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தற்போது செல்லம்மா என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சோஷியல் மீடியாவில் இந்த பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வெற்றி சாதனை புரிந்துள்ளது.

இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன்,மற்றும் மலையாள நடிகையான பிரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் கே. ஜே.ஆர்.ஸ்டுடியோஸூடன் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பாடல் ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதாகவும், டிக் டாக் செயலி பற்றி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பாடல் தற்போது யூடியூப் சேனலில் ட்ரெண்டாகி வருகிறது.

இதுகுறித்து 7 மில்லயன் வியூஸ் என்ற போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் Twitter-ல் வெளியிட்டு இருக்கின்றனர்.

Next Story