Kathir News
Begin typing your search above and press return to search.

பேருந்து நிறுத்த கழிப்பறையில் வாலிபரை தகாத உறவுக்கு அழைத்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் - 7 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய கொடூரம்!

பேருந்து நிறுத்த கழிப்பறையில் வாலிபரை தகாத உறவுக்கு அழைத்த விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் - 7 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய கொடூரம்!

பேருந்து நிறுத்த கழிப்பறையில் வாலிபரை தகாத உறவுக்கு அழைத்த  விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர் - 7 பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கிய கொடூரம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Sep 2019 2:10 PM GMT


சேலத்தில் 7 பெண்களை மிரட்டி ஆட்டோ டிரைவர் பலாத்காரம் செய் ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனார்.


சேலம் மாவட்டம் வேம்படித்தாளம் அடுத்த செல்லியம்பாளையம் மதுரை வீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ் (42). இவருக்கு மனைவி, மகன் உள்ளனர். ஆட்டோ மோகன் டிரைவரான இவர், விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற் சங்க தலைவராக உள்ளார். நேற்று காலை இளம்பிள்ளை பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கழிப்பறையில், வாலிபர் ஒருவரை மோகன்ராஜ் ஹோமோ செக்ஸ்க்கு அழைத்துள்ளார்.


அதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்ததால் தகராறு செய்துள்ளார். இதுபற்றி அந்த வாலிபர் மோகன்ராஜ் மீது மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப் பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தார். விசாரணைக்கு பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே விசாரணையில் மோகன்ராஜ் பற்றி திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது.


மோகன்ராஜ் ஆட்டோவில் பயணித்த போது, ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற் பட்டுள்ளது. அப்போது அந்த பெண் ணுடன் மோகன்ராஜ் உல்லாசமாக இருந்து அதனை வீடியோ எடுத்து வைத்துள்ளார். அந்த வீடியோவை காட்டி பல முறை படுக்கைக்கு அழைத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மோகன்ராஜை பிடித்து விசாரித்துள்ளனர். அவரின் செல்போனை வாங்கி சோதனையிட்டபோது, 7 பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வீடியோக்கள் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஒரு கல்லூரி மாணவியின் வீடியோவும் இருந்ததாக தெரிகிறது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண் டுள்ளனர்.


Next Story