Kathir News
Begin typing your search above and press return to search.

சீனாவுக்கு ஆதரவாக கொரோனா தொற்று குறித்து போலி பதிவுகளை பரப்பிய ஒரு லட்சத்து 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்.!

சீனாவுக்கு ஆதரவாக கொரோனா தொற்று குறித்து போலி பதிவுகளை பரப்பிய ஒரு லட்சத்து 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்.!

சீனாவுக்கு ஆதரவாக கொரோனா தொற்று குறித்து போலி பதிவுகளை பரப்பிய ஒரு லட்சத்து 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  13 Jun 2020 12:07 PM GMT

டுவிட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் வி.பி.என். மூலம் பலரும் ட்விட்டரை பயன்படுத்தி வருகின்றனர். சீன அரசாங்கத்தால் பணியமர்த்தப்பட்ட சமூக வலைதள செயற்பாட்டாளர்கள் சீன அரசாங்கத்திற்கு உகந்த ஆன்லைன் தகவல்களை ட்விட்டரில் பரப்புகின்றன.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய் மற்றும் ஹாங்காங் ஆர்ப்பாட்டங்கள் குறித்து போலியான தகவல்களை பரப்புகின்றன. இதை அடுத்து போலியான தகவல்களை பரப்பும், 1 லட்சத்து 70 ஆயிரம் கணக்குகளை ட்விட்டர் நிறுவனம் முடக்கியுள்ளது.

முக்கியமாக இந்த கணக்குகள் அனைத்தும் சீன மொழிகளில் மட்டும் ட்வீட் செய்கின்றனர் என ஸ்டான்போர்டு இணைய ஆய்வகத்தின் ஆராய்ச்சி மேலாளர் ரெனீ டிரெஸ்டா கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் , 'இந்த கணக்குகள் பல ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டன. மேலும், கொரோனா தொற்று பற்றி போலியான உண்மைக்கு புறம்பான பதிவுகளை இடுவதில் ஈடுபட்டுள்ளன. கொரோனா தொற்றை ஒழிக்க சீனா பாடுபடுவதாக பாராட்டு தெரிவித்தும், ஹாங்காங் போராட்டக்காரர்கள் மற்றும் அமெரிக்காவை விரோதிகளாக சித்தரித்தும் ட்வீட்களை பதிவு செய்துள்ளன' என்றார்.

ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவாக புவிசார் அரசியல் குறித்து பரப்புவது, தனது இயங்குதள கொள்கைக்கு எதிராக உள்ளது. சீனாவிற்கு சாதகமான செய்திகளை உருவாக்குவதில் 23,750 கணக்குகள் முக்கிய நெட்வோர்க் உடன் இணைந்து மிகவும் ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்ததையும், அவற்றை ரீ-ட்வீட் செய்து பரப்புவதற்கு பயன்படுத்தப்பட்ட 1 லட்சத்து 50 ஆயிரம் கணக்குகளை அடையாளம் கண்டோம். இந்த 23,750 கணக்குகள், சுமார் 3 லட்சத்து 48 ஆயிரத்து 608 முறை ட்வீட் செய்துள்ளதாக கூறியுள்ளது.

https://timesofindia.indiatimes.com/world/china/twitter-deletes-1-7-lakh-accounts-tied-to-china/articleshow/76350952.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News