Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா தொற்றை குணப்படுத்த ரூ.76.55 கோடி மதிப்பில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் கொள்முதல் - முதலமைச்சர் வெளியிட்ட உத்தரவு!

கொரோனா தொற்றை குணப்படுத்த ரூ.76.55 கோடி மதிப்பில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் கொள்முதல் - முதலமைச்சர் வெளியிட்ட உத்தரவு!

கொரோனா தொற்றை குணப்படுத்த ரூ.76.55 கோடி மதிப்பில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகள் கொள்முதல் - முதலமைச்சர் வெளியிட்ட உத்தரவு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 July 2020 11:48 AM GMT

கொரோனா தொற்றை குணப்படுத்த உயர்தர சிகிச்சை அளிப்பதற்காக ரூ. 76.55 கோடி மதிப்பில் அதிநவீன உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிளை கொள்முதல் செய்ய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுடன் நுரையீரல் பாதிப்பு உள்ள நோயாளிகளின் உயிரிழப்பை தவிர்க்கும் பொருட்டு ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு போர்கால அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. இப்பணிகளுக்காக முதலமைச்சர் ஏற்கனவே, ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் இப்பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவிகளை (High Flow Nasal Canula) கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் ரூ. 76.55 கோடி மதிப்பீட்டில் 2414 கருவிகளை வாங்குவதற்கு கொள்முதல் ஆணை பிறப்பித்து, இதுவரை 530 கருவிகளை தருவித்துள்ளது.

பொதுவாக, சுவாசகோளாறு உள்ள நோயாளிகளுக்கு தேவைப்படும் போது குழாய்கள் வழியாக ஆக்சிஜன் வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் ஆக்சிஜன் அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 12 லிட்டர் வரை மட்டுமே வழங்க இயலும். கொரோனா நோயாளிகளுக்கு உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி மூலம் அதிகபட்சமாக ஒரு நிமிடத்திற்கு 60 லிட்டர் ஆக்சிஜன் வழங்க இயலும். இக்கருவி மூலம் உயர் ஓட்ட ஆக்சிஜன் வழங்கும் போது நோயாளிகளுக்கு ஏற்படும் தீவிர மூச்சு திணறல் குறைந்து நுரையீரல் பாதிப்பினையும் தடுக்க முடிகிறது.

மேலும், பாதிப்புக்குள்ளான நுரையீரல் வெகுவிரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப ஏதுவாகிறது. கூடுதலாக நோயாளிகள் இக்கருவியை தேவைப்படும் பொழுது தானாகவே பொருத்திக்கொள்ளவும் அகற்றவும் முடியும். உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் நிறுவனமும் பரிந்துரைத்துள்ள இக்கருவியை கையாள்வதற்கு மருத்துவர்களுக்கோ செவிலியர்களுக்கோ சிறப்பு பயிற்சி தேவையில்லை.

இக்கருவி தேவையின் அடிப்படையில் படிப்படியாக மேலும் தருவிக்கப்படும் இதுபோன்ற உயர்தர அதிநவீன கருவிகளை மேலை நாடுகளிலிருந்து தருவித்து கொரோனா சிகிச்சைக்காக அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படுத்துவதால் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. முதலமைச்சரின் இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் பணிகள் மேலும் கொரோனா சிகிச்சைகளை தீவிரப்படுத்தி விலை மதிப்பற்ற உயிர்களை காப்பதற்கு பேருதவியாக அமையும்.

Next Story