ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தாமல் இருந்திருந்தால், இன்று இந்தியாவில் 8 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றி இருக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு!
ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தாமல் இருந்திருந்தால், இன்று இந்தியாவில் 8 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றி இருக்கும் - அதிர்ச்சி தரும் ஆய்வு!

இன்று வரை இந்தியாவில் கொரோனா நோய் தொற்றால் 6,500 பேருக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 200 பேர் மரணித்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அறிவித்தது சிறந்த செயல் என அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், 21 நாள் ஊரடங்கை பிரதமர் மோடி அமல்படுத்தாமல் இருந்து இருந்தால், இப்போது இந்தியாவில் 8 லட்சத்தி 20 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றி பரவி இந்தியா மிகவும் மோசமான நிலைக்கு சென்று இருக்கும் என்று ICMR அமைப்பின் ஆய்வு தெரிவித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் தள்ளியுள்ளது.
Corona infections would have crossed 8.20 lakh in India by 15 April if there was no lockdown here: ICMR Research.
— Amit Malviya (@amitmalviya) April 10, 2020
The number of Corona positive patients is around 6,400 as on 10 April. #IndiaFightsCorona pic.twitter.com/GGjq4UE7UT
இதனிடையே பிரதமர் மோடியின் செயல் தான் சரி என்றும், அவரின் அனைத்து முடிவுகளுக்கும் நாங்கள் உறுதுணையாக இருந்து கொரோனாவை விரட்டியடிப்போம் என இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.