தமிழகத்தில் 16 பேருக்கு கொரோனா வர காரணமாக இருந்த இஸ்லாம் மத போதகர்கள் - ஈரோட்டில் மேலும் 8 பேருக்கு நோய்தொற்று உறுதியானது!
தமிழகத்தில் 16 பேருக்கு கொரோனா வர காரணமாக இருந்த இஸ்லாம் மத போதகர்கள் - ஈரோட்டில் மேலும் 8 பேருக்கு நோய்தொற்று உறுதியானது!

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ''தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவரகள் அனைவரும் தாய்லாந்திலிருந்து ஈரோடு வந்து கரோனா தொற்றுடன் பாதிக்கப்பட்ட 2 பேருடன் தொடர்பில் இருந்தவர்கள். அனைவரும் ஈரோடு பெருந்துறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என்கிற சந்தேகத்தில் ஏற்கெனவே தனிமைப்படுத்தப்பட்டவர்கள்'' என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
29 வயதான மருத்துவர் உட்பட நான்கு பேர் கோவையைச் சேர்ந்தவர்கள் என்று தமிழக சுகாதார குடும்ப நலத்துறை குறிப்பு தெரிவித்துள்ளது. மற்ற மூன்று பேரும் அவரது குழந்தை, தாய் மற்றும் வீட்டு பணியாளர் ஆவர்.
நோய்த்தொற்று ஏற்பட்ட ஈரோடில் இருந்து நான்கு பேர் டெல்லியில் இருந்து ஈரோடு வரை பயண வரலாற்றைக் கொண்டிருந்தனர் என்று அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த நபர்கள் தாய் தப்லிகி போதகர் குழுவில் அங்கம் வகித்தவர்களா அல்லது மில்லினியம் எக்ஸ்பிரஸின் பயணிகளாக இருந்தார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஈரோடில் இருந்து எட்டு பேர் உட்பட, இதுவரை 16 பேர் இந்தோனேசிய அல்லது தாய் தப்லீகி ஜமாஅத் போதகர்களுடன் தொடர்பு கொண்ட பின்னர் தமிழகத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை அண்ணா நகர் மசூதியில் இரண்டு தாய்லாந்து தப்லிகி இஸ்லாம் மதபோதகர்களுடம் தொடர்பு கொண்டு வந்த 54 வயதான ஒரு நபரிர் தொற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இறந்த நபரின் மனைவியும் மகனும் இப்போது பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் உறுதியான 50 பேரில் நான்கு பேர் மீண்டுள்ளனர். சுமார் 300 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர்.