Kathir News
Begin typing your search above and press return to search.

நாகர்கோயிலில் பசிக்கு உணவு கேட்ட எட்டு வயது ஏழை சிறுமிக்கு சாப்பாடு போட்டு பாலியல் பலாத்காரம்!! 75 வயதான முகம்மது நூத், அப்துல் ஜாபர் உட்பட நான்கு முதியவர்கள் சிறையில் அடைப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Jun 2020 12:18 PM GMT

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் வேலை இழந்த கூலி தொழிலாளி தந்தையுடன் எட்டு வயது சிறுமி வசித்து வந்தார். சில தினங்களுக்கு முன்பாக வீட்டில் உணவுப் பொருள்கள் எதுவும் இல்லாத நிலையில் மூவரும் பசியுடன் இருந்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுமி அருகில் தங்களுடன் வசித்து வந்த முகம்மது நூத் ( வயது 75 ), ஜாஹாதசன் ( வயது 52 ), ஜாகீர் ஹுசேன் ( வயது 53 ), அப்துல் ஜாபர் ( வயது 68) ஆகியோரை சந்தித்து தங்கள் வீட்டுக்கு உணவு கேட்டுள்ளார்.

நால்வரும் அந்த குழந்தைக்கு முதலில் உணவு கொடுத்து சாப்பிட சொல்லியுள்ளனர். அந்த சிறுமி சாப்பிட்டதும் நால்வரும் கும்பலாக அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்த சிறுமி முதலில் யாரிடமும் சொல்லவில்லை. இரண்டு நாட்களுக்கு பின் அந்த சிறுமியின் வலி, மாறுபட்ட நடையை பார்த்து சந்தேகம் கொண்ட அவருடைய தந்தை விசாரித்ததில் அப்போது நடந்த உண்மைகளை அந்த சிறுமி அழுது கொண்டே கூறியுள்ளார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பரண்ட் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அடுத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு வயதான நான்கு சிறுபான்மை பிரிவை சேர்ந்த பெரியவர்களையும் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 2 மைனர் சிறுவர்கள் குறித்தும் விசாரித்து வருகின்றனர். குளச்சல் பெண் காவல் நிலைய போலீசார் மற்றும் கூடுதல் உதவி போலீஸ் சூப்பரன்ட் அதிகாரி ஆகியோர் இந்த வழக்கில் புலனாய்வு செய்து வருகின்றனர். இரண்டு மைனர் சிறுவர்கள், நான்கு வயதான பெரியவர்கள் மூர்கத்தனமாக ஈடுபட்ட இந்த கொடூர சம்பவம் அந்த பகுதியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

Next Story