ஊரடங்கை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என 88% மக்கள் கருத்து.!
ஊரடங்கை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என 88% மக்கள் கருத்து.!

சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி வருகிறது. இதனால் இதுவரை 86ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 14லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பரவி 5ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 100க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது உத்தரவு அமலில் உள்ளது.
மேலும் இந்த ஊரடங்கு உத்தரவை பிடிக்கை வேண்டுகோளை பல மாநில அரசுகள் மத்திய அரசுக்கு தெரிவித்து வருகின்றனர் இதன் இடையே ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அதில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளனர். ஊரடங்கு உத்தரவை நீடிப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த தருணத்தில் இன்ஷார்ட்ஸ் என்னும் செய்தித்தளம் 40 ஆயிரம் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக் கணிப்பில் இந்தியாவில் 88 சதவீத மக்கள் ஊரடங்கு உத்திரவை நீடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் 92 சதவீதம் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றறை பரிசோதனையை அதிகரிக்க தனியார் துறையும் அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2518084