Kathir News
Begin typing your search above and press return to search.

89 செயலிகளை நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு - ஃபேஸ்புக் உட்பட.! #IndianArmy #AppsBanned

89 செயலிகளை நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு - ஃபேஸ்புக் உட்பட.! #IndianArmy #AppsBanned

89 செயலிகளை நீக்க வீரர்களுக்கு இந்திய ராணுவம் உத்தரவு - ஃபேஸ்புக் உட்பட.! #IndianArmy #AppsBanned

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 July 2020 3:00 AM GMT

இந்திய ராணுவத்தினர் முகநூல், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட 89 செயலிகளை தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது பாதுகாப்பு நடவடிக்கை என்றும் குறிப்பிடபட்டுள்ளது.

தகவல்கள் கசிவதை தடுக்க முகநூல், டிக்டாக், ட்ரூ காலர், இன்ஸ்டாகிராம், வி சாட், ஹலோ சாட், ஷேர் சாட், ஹைக், ஷேர் ஹிட், செண்டெர், யூசி பிரவுசெர், யுசி பிரசெர் மினி, ஷூம், கேம் ஸ்கேன்னர், பியூட்டி பிளஸ், பப்ஜி, கிளாஸ் ஆஃப் கிங்ஸ், மொபைல் லிஜெண்ட்ஸ், கிளப் ஃபேக்டரி, டிண்டெர், 360 செக்யூரிட்டி, ஸ்நாப் சாட், தம்பிர், ரெட்டிட் உள்ளிட்ட 89 செயலிகளை ராணுவ வீரர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் இருந்து நீக்க வேண்டும் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் இந்தியாவில் டிக்டாக், யுசி பிரவுசெர், ஹலோ சாட் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story