மக்கள் கூட்டம்.. ஆம்பூர் உமர் சாலையில் இயங்கிய 9 இறைச்சி கடைகளுக்கு அதிரடி சீல்...
மக்கள் கூட்டம்.. ஆம்பூர் உமர் சாலையில் இயங்கிய 9 இறைச்சி கடைகளுக்கு அதிரடி சீல்...

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது.
இதனையடுத்து பிரதமர் நரேந்திரமோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவால் கொரோனா தொற்று மனிதர்களிடையே பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆம்பூரில் சமூக இடைவெளியை பின்பற்றாத 9 இறைச்சி மற்றும் மீன் கடைகளுக்கு வட்டாட்சியர் அதிரடியாக சீல் வைத்தார்.
ஆம்பூர் உமர் சாலை மற்றும் மார்க்கெட் பகுதியில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக இறைச்சி, மற்றும் மீன் கடைகளில் காணப்பட்டனர்.
இதனால் எளிதில் கொரோனா தொற்று பரவுவதற்கு வாய்ப்புள்ளது. இதனையறிந்த வட்டாச்சியர் செண்பகவள்ளி 9 கடைகளுக்கு சீல் வைத்தார்.
மேலும், அவர் கூறியதாவது: சமூக இடைவெளி கடை பிடிக்க செய்யாத கடைகளுக்கும் சீல் வைக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார்.