Kathir News
Begin typing your search above and press return to search.

9 ஆம் தேதி அமித் ஷா, 15 ஆம் தேதி பிரதமர் தமிழகம் விஜயம் ! கூட்டணி குறித்து முடிவு ?

9 ஆம் தேதி அமித் ஷா, 15 ஆம் தேதி பிரதமர் தமிழகம் விஜயம் ! கூட்டணி குறித்து முடிவு ?

9 ஆம் தேதி அமித் ஷா, 15 ஆம் தேதி பிரதமர் தமிழகம் விஜயம் ! கூட்டணி குறித்து முடிவு ?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 July 2018 1:15 PM GMT

மதுரையில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனையின் அடிக்கல் நாட்ட, காமராஜர் பிறந்தநாள் அன்று, பிரதமர் தமிழகத்திற்கு வரவிருக்கிறார். வரும் லோக் சபா தேர்தல் வியூகம் அமைக்க, அமித் ஷா அவர்கள் 9 ஆம் தேதி சென்னை வரவிருக்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முடியாது என்ற விமர்சனத்தை திராவிட கட்சிகள் முன்வைக்கின்றன. அதை முறியடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா மிகவும் பிடிவாதமாக உள்ளதாக தெரிகிறது. அடுத்த ஆண்டு லோக் சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலும் சேர்ந்து நடந்தால் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற வியூகமும், கூட்டணி அமைக்கும் வியூகமும் அமைக்க கட்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மத்திய அரசின் திட்டங்களை அதிகாரிகள் பொது மக்களிடம் எடுத்து செல்வதை விட, தமிழக பா.ஜ.க வினர் ஒன்றியம் கிளை வாரியாக மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அமித் ஷா விரும்புகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட வாரியாக மக்களிடம் திட்டங்கள் குறித்து பயிற்சி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நான்கு பொதுச்செயலாளர்களுக்கு 10 லோக்சபா வீதம் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 39 தொகுதிகளுக்கு உள்ளே இருந்து ஒருவரும் வெளியே இருந்து ஒருவரும் என தலா இருவர் வீதம் 78 பொறுப்பாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர் . அதே போல் , 234 சட்டசபை தொகுதிகளுக்கும் உள்ளே இருந்து ஒருவரும், வெளியே இருந்து ஒருவரும், 468 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர, 25 பூத் கமிட்டிக்கு, 60 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு 2,400 பெரும். 5 பூத் கமிட்டிகளுக்கு ஒருவர் என்று 12,000 பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து சென்னையில் கலந்துரையாட உள்ளார் அமித் ஷா அவர்கள்.
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலிலும், 2018 ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி கூட்டணியை பா.ஜ.க வால் அமைக்க முடியவில்லை. தற்போது செல்வி. ஜெயலலிதா அவர்கள் இல்லை. கலைஞர் கருணாநிதி அவர்களால் களமிறங்க முடியாத நிலை. இந்த சூழ் நிலையில் எளிதாக பா.ஜ.க வால் வெற்றி கூட்டணியை அமைக்க முடியும் என்று அமித் ஷா உறுதியாக நம்புகிறார். மோடி வருகை தரும் பொழுது, முதல்வர் திரு. பழனிசாமி அவர்களும், துணை முதல்வர் திரு. பன்னீர்செல்வம் அவர்களும் தனியாக சந்தித்து, லோக் சபா கூட்டணி திட்டம் பற்றி பேச உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story
கதிர் தொகுப்பு
Trending News