Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா முழுவதும் நடந்து வரும் கொரோனோ பரிசோதனை எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது.! #Covid19 #India #CoronaTest

இந்தியா முழுவதும் நடந்து வரும் கொரோனோ பரிசோதனை எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது.! #Covid19 #India #CoronaTest

இந்தியா முழுவதும் நடந்து வரும் கொரோனோ பரிசோதனை எண்ணிக்கை 90 லட்சத்தை கடந்தது.! #Covid19 #India #CoronaTest

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2020 2:52 AM GMT

கொரோனாவை ஒழிப்பதில் முக்கிய பங்காற்றும் நடவடிக்கைகளில் தொற்று பரிசோதனையும் ஒன்றாகும். விரைவில் தொற்றை கண்டறிந்து, நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தி, சிறந்த சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகளை மேற்கொள்வதால் கொரோனா பரவலை தடுக்க முடியும். எனவே உலக நாடுகள் அனைத்தும் கொரோனா பரிசோதனைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றன

இந்தியாவும் இந்த பரிசோதனை நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்த சோதனைக்காக புனேயில் உள்ள தேசிய வைரஸ் தொற்று ஆய்வு நிறுவனம் என்ற ஒற்றை பரிசோதனைக்கூடம் மட்டுமே முதலில் இருந்த நிலையில், முழு ஊரடங்குக்கு முன்னே 100 பரிசோ தனைக்கூடங்கள் என்ற நிலைக்கு அதிகரிக்கப்பட்டது.

தற்போது நாடு முழுவதும் 1065 பரிசோதனைக்கூடங்கள் உள்ளன.இதில் 297 தனியாருக்கு சொந்தமான. இந்த பரிசோதனைக்கூடங்கள் மூலம் நேற்று முன்தினம் வரை 90 லட்சத்து 56 ஆயிரத்து 173 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. அன்று ஒரேநாளில் மட்டுமே 2 லட்சத்துக்கு மேற்பட்ட சளி மாதிரிகள் பரிசோதிக்கப்பட் டன்

இவ்வாறு நாள்தோறும் லட்சக்கணக்கில் பரிசோதனைகள் மேற் கொள்ளப்படுவதால் இந்த எண்ணிக்கை விரைவில் 1 கோடியை எட்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இந்த பரிசோதனைகளை வெறும் அரசு டாக்டர்கள் மட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட இந்த ஒரு டாக்டரின் பரிந்துரையின் பேரில் மேற்கெள்ளலாம் என அரசு தற்போது அறிவித்து உள்ளது. இதன் மூலம் இந்த பரிசோதனை எண்ணிக்கைகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News