கொரோனாவின் பயத்தால் விளையாடும் போது இரும்பிய நண்பனை துப்பக்கியால் சுட்ட நண்பன், டெல்லியில் பரபரப்பு.!
கொரோனாவின் பயத்தால் விளையாடும் போது இரும்பிய நண்பனை துப்பக்கியால் சுட்ட நண்பன், டெல்லியில் பரபரப்பு.!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் வரவு வருகிறது. இதனால் இதுவரை 11ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 300க்கும் அதிகமானோர் உயிழந்துள்ளனர்.
மேலும் இந்தியாவில் மஹாராஷ்டிராவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா, இரண்டாவது இடத்தில் டெல்லி மற்றும் மூன்றாவது இடத்தில் தமிழ்நாடும் உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள தயாநகர் என்ற இடத்தில் கொரோனா வைரஸின் பயத்ததால் நண்பனை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தி உள்ளது.
நேற்று இரவு பிரவீஷ் என்பவர் அவருடைய நண்பர்களோடு செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பிரவீஷ் தொடர்ந்து இரும்பி உள்ளார். இதற்கு கோவம் அடைந்த ஜெய்வீர் அவருடன் வாக்குவதில் ஈடுபட்டு, பின்னர் பிரவீஷை தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
துப்பாக்கியின் குண்டு பிரவீஷின் காலில் துளைத்தது. இதனால் அவர் உயிர் தப்பினார். பிறகு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்ததை பார்த்த ஜெய்வீர் தப்பி ஓடியுள்ளார். தற்போது பிரவீஷ்க்கு மருத்துவமனையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெய்வீரை தேடி வருகின்றனர்.