Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியை எடுத்துக் கொள்ளலாம் - விஜயகாந்த் அறிக்கை!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியை எடுத்துக் கொள்ளலாம் - விஜயகாந்த் அறிக்கை!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஆண்டாள் அழகர் கல்லூரியை எடுத்துக் கொள்ளலாம் - விஜயகாந்த் அறிக்கை!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 April 2020 11:21 AM GMT

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது.

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாகவும். இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒருநாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். இப்படி இருக்கும் போது மருத்துவத்துறையை தேர்ந்தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாரதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணி பார்க்க வேண்டும். கால்நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள்!

தற்போது, மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிரிப்பு தெரிவிப்பது மிகுவும் வேதனை அளிக்கிறது. உடலை அடக்கம் செய்வதால் எந்த தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும், தமிழக அரசும் அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் தவறாக புரிந்து கொண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும் ஓட்டுனர் உள்பட மற்றவர்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது எனக் குறிப்பிட்டுள்ள விஜயகாந்த், மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து, இதுபோன்ற செயலில் இனிமேல் யாரும் ஈடுபட வேண்டாம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கடவுளுக்கு அடுத்தப்படியாக நாம் கருதுவது மருத்துவர்களை தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு இந்த நிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News