Kathir News
Begin typing your search above and press return to search.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க இருக்கும் - டி.டி.வி தினகரன் சவால்!

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.கவை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க இருக்கும் என்று மயிலாடுதுறையில் டி.டி.வி தினகரன் கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கவை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க இருக்கும் - டி.டி.வி தினகரன் சவால்!

KarthigaBy : Karthiga

  |  24 Nov 2022 10:15 AM GMT

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் நேற்று தருமபுர ஆதீனத்திற்கு வந்து ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சாமிகளை குடும்பத்தினருடன் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-


அ.தி.மு.க செயல்படாத நிலையில் உள்ளது எடப்பாடி பழனிசாமி செய்த தவறால் சின்னம் இல்லாமல் கட்சி இல்லாமல் தற்போது நீதிமன்றத்தில் போராட்டம் நடத்தி வருகிறார். அ.தி.மு.க பற்றி பேசுவது தேவையற்றது என்று நினைக்கிறேன். தேர்தல் சமயத்தில் பேசிக்கொள்ளலாம். சசிகலா வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. அது குறித்து எனக்கு தெரியாது. டிசம்பர் மாத கடைசியில் கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படும். மத்தியில் பிரதமர் வேட்பாளர் யார் என்று சொல்லுகிற வகையில் கூட்டணி அமைக்கப்படும் ஒன்றை ஆண்டு ஆட்சியில் மக்களிடம் தி.மு.க வருத்தத்தை சந்தித்துள்ளது. அது சரி செய்து கொள்ளவில்லை என்றால் மோசமான நிலையை சந்திப்பார்கள் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்தும் கூட்டணியில் அ.ம.மு.க இருக்கும்.


மழை வெள்ள பாதிப்பால் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது தி.மு.க ஆட்சியின் அவலங்கள் ஆகும். மக்களை ஏமாற்றும் ஆட்சியாக தமிழக அரசு உள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகள் கட்டியதில் ஊழல் இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.அ.தி.மு.க ஆட்சியில் பல துறைகளில் முறைகேடு நடைபெற்றதால்தான் தி.மு.க விற்கு மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். எந்த ஊழாக இருந்தாலும் கத்திரிக்காய் முத்தினால் சந்தைக்கு வந்து தான் தீர வேண்டும். மயிலாடுதுறை மாவட்டத்தை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30,000 வழங்க வேண்டும் ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் குறைந்தது 3 ஆயிரம் வழங்க வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பாக உள்ளது. நியாயமான கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். அதற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். தி.மு.க அமைச்சர்கள் மத்தியில் சண்டை நடக்கிறது இது தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஆளுமையை கேள்விக்குறியாக்கி உள்ளது. இதுவும் திராவிட கட்சிக்கு ஒரு உதாரணம். இவ்வாறு அவர் கூறினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News