உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மாவை 400 தடவை கத்தியால் குத்தி கொடூர கொலை புரிந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் கைது!
உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மாவை 400 தடவை கத்தியால் குத்தி கொடூர கொலை புரிந்த ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன் கைது!

டெல்லி கலவரத்தின் போது தனது வேலை நிமித்தமாக சம்பவ இடத்துக்கு சென்ற உளவுப்பிரிவு அதிகாரி அங்கித் சர்மாவை அவர் இந்து என்கிற ஒரே காரணத்துக்காக 6 பேர் மூலம் தனது வீட்டு பின் பக்கம் இழுத்து சென்று, கூர்மையான ஆயுதங்களால் 400 தடவைக்கும் மேல் உடலெங்கும் குத்தி 4 மணிநேரத்துக்கு மேல் சித்திரவதைகள் செய்து உடலை கால்வாயில் வீசியவன் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசைன்.
இந்த சம்பவத்துக்குப் பிறகுதான் அங்கு இருதரப்புக்கிடையே கலவரம் முற்றியது. 40 க்கும் மேற்பட்டோர் வன்முறையில் இறந்தனர். இந்த சம்பவத்தின் காரணகர்த்தா தாஹிர் உசைன் தான் என தெரியவந்ததால் அந்த கட்சியில் இருந்து நீக்கப்பட்டான்.
மேலும் இவன் வீட்டு மாடியில் இருந்து பெட்ரோல் குண்டுகள், கற்கள் வீசுவது போன்ற வீடியோவும் வெளியானது.
தலைமறைவாகிய இவனை போலீசார் வலை வீசி தேடி வந்தனர். இந் நிலையில் தாஹிர் உசைன், முன்ஜாமின் கேட்டு டில்லியின் கர்கர்டூமா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மனு தாரர் சார்பில் யாரும் ஆஜராகாததால் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து உடனடியாக தாகிர் உசைனை போலீசார் கைது செய்தனர். அவனை மருத்துவ பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
Image Credits : Dinamalar