போராட்டத்தை கைவிட்டு சுகாதார ஊழியர்கள் 48 மணி நேரத்துக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை!
போராட்டத்தை கைவிட்டு சுகாதார ஊழியர்கள் 48 மணி நேரத்துக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் - சுகாதாரத்துறை இயக்குநர் எச்சரிக்கை!

புதுச்சேரி அரசு சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார இயக்கத் திட்டத்தில் 800க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு அரசு பொதுமருத்துவமனைகள் உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 15 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்கள்.
இவர்களுக்கு பல ஆண்டுகளாக, தொகுப்பு ஊதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆண்டு தீபாவளிக்கு அறிவித்த போனஸ் இதுவரை வழங்காததை கண்டித்தும், பணிநிரந்தரம் மற்றும் சமவேலை சம ஊதியம் வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் கடந்த 2ம் தேதி மாலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினா். தொடர்ந்து இரவு பகலாக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
இதனிடையே கொரானா நோய் தொடர்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு செய்ய முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டு இருந்தார். மேலும் சுகாதாரத்துறை பணியாளர்களின் போராட்டம் காரணமாக தற்போது அந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளாதால் சுகாதாரத்துறை இயக்குனர் மோகன் குமார் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் 48 மணி நேரத்துக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், அப்படி இல்லை என்றால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் மேலும் பணியாளர்க்ந்ளின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற இயலாது எனவும் திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.