Kathir News
Begin typing your search above and press return to search.

சம்பளத்தில் 25 லட்சத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுக்க சொன்ன நடிகர் ராகவா லாரன்ஸ்!

சம்பளத்தில் 25 லட்சத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுக்க சொன்ன நடிகர் ராகவா லாரன்ஸ்!

சம்பளத்தில் 25 லட்சத்தை தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுக்க சொன்ன நடிகர் ராகவா லாரன்ஸ்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  14 April 2020 1:16 PM GMT

நடிகர் ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் இன்று தமிழ் புத்தாண்டு என்பதால் நடிகர் ராகவா லாரன்சை தொடர்புகொண்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தயாரிப்பாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

அப்போது நடிகர் ராகவா லாரன்ஸ் நாம் வீட்டிற்கு வாங்கி வரும் அத்தியாவசிய பொருட்களையே 12 மணிநேரம் வெளியில்வைக்கும் இச்சமயத்தில், நம்வீட்டு குப்பைகளை முகம்சுளிக்காமல் தினமும் எடுத்து செல்லும் தூய்மை பணியாளர்களுக்கு உதவி செய்ய விரும்புவதாகவும், தாங்கள் எனக்கு கொடுக்கவிருக்கும் சம்பளத்தொகையில் 25 லட்சம் ரூபாயை தூய்மை பணியாளர்களுக்கு, அவர்களின் வங்கிகணக்கில் நேரிடையாக சென்றடைய வழி செய்யுமாறும் கூறியதாக தயாரிப்பாளர் கதிரேசன் தெரிவித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் அவர்களின் விருப்பபடி 25 லட்சம் ரூபாயை தூய்மைபணியாளர்களின் வங்கிகணக்கில் செலுத்த உள்ளதாகவும் ஆகவே தூய்மை பணியாளர்கள் தங்களின் அடையாள அட்டை மற்றும் வங்கிகணக்கு விவரங்களை 6382481658 வாட்ஸ் அப் எண்ணுக்கு விவரங்களை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிவாரண நிதிக்கு முன்னரே 3 கோடி ரூபாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story