Kathir News
Begin typing your search above and press return to search.

அயோத்தியில் ராமர் கோவில்: #காணொளி - அத்வானியின் புகழ்வாய்ந்த ரத யாத்திரை.!

அயோத்தியில் ராமர் கோவில்: #காணொளி - அத்வானியின் புகழ்வாய்ந்த ரத யாத்திரை.!

அயோத்தியில் ராமர் கோவில்: #காணொளி - அத்வானியின் புகழ்வாய்ந்த ரத யாத்திரை.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  5 Aug 2020 6:04 AM GMT

அயோத்தியில் உள்ள ராமர் ஜென்ம பூமியில், ராமர் கோவில் கட்டும் தீர்மானத்துடன் LK அத்வானி சோம்நாத்தில் இருந்து, தனது ரத யாத்திரையை செப்டம்பர் 1990ல் தொடங்கினார். 'பச்சா பச்ச ராம் கா, ஜன்மபூமி கே காம் கா' மற்றும் 'ஜன்மபூமி கே காம் நா ஆயே, வோ பெக்கார் ஜாவ்' போன்ற கோஷங்கள் காற்றை நிரப்பின. அப்போதைய பா.ஜ.க தலைவரான அத்வானியின் ரத யாத்திரை அயோத்தியை அடைய முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ராமர் கோவில் கட்டுவதற்கான ஆதரவையும், மக்களின் உணர்ச்சியைத் தட்டி எழுப்பியதிலும் அவர் வெற்றி பெற்றார்.

LK அத்வானி இந்திய அரசியலிலும், சமூகத்திலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு அடித்தளம் அமைத்தார். 1990 ஆம் ஆண்டின் செப்டம்பர் 25ல் ரதயாத்திரையை அவர் தொடங்கினார். அந்த ரத யாத்திரைஅயோத்தியை அக்டோபர் 30-ஆம் தேதி அடைய இருந்தது. ஆனால் அவர் தனது இலக்கை அடைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டார்.

1990இல் V. P சிங், பா.ஜ.கவின் உதவியுடன் இந்தியாவின் பிரதமரானார். பா.ஜ.க அந்த தேர்தலில் 58 இடங்களை பெற்று இருந்தது அப்போதைய பா.ஜ.க தலைவரான LK அத்வானி ராமர் கோவிலுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுமைக்கும் ஒரு ரதயாத்திரை நடத்த முடிவு செய்தார். அக்டோபர் 23ஆம் தேதி 1990 இல் அவர் பிஹாரில் கைது செய்யப்பட்டார். இதன் விளைவாக பா.ஜ.க அரசாங்கத்திற்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்கியது.

அவர் சோம்நாத்தை விட்டுப் புறப்பட்டு அயோத்திக்கு கிளம்பிய போது ஆயிரக்கணக்கான ராம பக்தர்கள் ஒவ்வொரு கட்டத்திலும் அவருடன் துணை இருந்தனர். கோவில் கட்டுவதற்கு ஆதரவை தெரிவிக்கும் மந்திரங்களும் கோஷங்களும் அவர் ரதயாத்திரை கடந்து சென்ற ஒவ்வொரு நகரம் முழுவதும் எதிரொலித்தது.



ராமர் கோவில் கட்டுவதற்கான திட்டம் 1984-85ல் ஆரம்பிக்கப்பட்டது. அசோக் சிங்கால் அவர்களின் இல்லத்தில் கூட்டங்கள் கூட்டப்பட்டன. ராஜா பாய், டாக்டர் முரளி மனோகர் ஜோஷி, கல்யாண்சிங், சுப்பிரமணியன் சுவாமி, உமாபாரதி, சாத்வி ரிதம்பரா, வினய் கட்டியார் உள்ளிட்ட பல பிரதான அரசியல் தலைவர்களும் துறவிகளும் இந்த கூட்டங்களில் பங்கெடுத்தனர். அசோக் சிங்கால் அத்வானிக்கு ரத யாத்திரையின் போது தன் முழு ஆதரவை வழங்கினார். 'ஹம் மந்திர் வாஹின் பனயங்கே' மற்றும் 'டெல் லாகா லோ தபூர் கா, நாம் ஜலா தோ பாபர் கா' போன்ற கோஷங்கள் விண்ணைப் பிளந்தன. பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அத்வானியை பீகாரில் கைது செய்ததுடன் திடீரென ரதயாத்திரை ஒரு முடிவுக்கு வந்தது.



கடந்த வருடம் ராமர் கோவில் அயோத்தியில் கட்டப்பட போகிறது என்ற செய்தியைக் கேட்டதும் நாடு முழுவதிலும் இருக்கும் ஹிந்துக்கள் உற்சாகமடைந்தனர். கடந்த வருடம் நவம்பர் 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் ராம்லாலா விஜ்மானுக்கு சாதகமான தீர்ப்பை அளித்தது. அயோத்தியில் ஒரு கோவில் கட்டுவதற்காக அந்த நிலத்தை ஒப்படைக்குமாறு அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. ஒரு அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் படி கட்டுமானத்திற்காக அமைக்கப்பட்டுள்ளது. வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலங்களை வழங்குமாறு அரசாங்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி (இன்று) ராமர் கோயிலின் பூமி பூஜை நடக்க இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி இதில் பங்கெடுத்து வெள்ளிச் செங்கலை வைத்து அடிக்கல் நாட்டுவார்.

Next Story