விபரம் தெரிந்ததும் மலேசியாவில் தவித்த தமிழக மாணவர்கள் உள்பட 185 பேரை அதிரடியாக மீட்ட இந்தியா!
விபரம் தெரிந்ததும் மலேசியாவில் தவித்த தமிழக மாணவர்கள் உள்பட 185 பேரை அதிரடியாக மீட்ட இந்தியா!

பிலிப்பைன்சில் இருந்து புறப்பட்டு மலேசியாவில் சிக்கித் தவித்த 150 தமிழக மாணவர்கள் உள்ளிட்ட 185 இந்தியர்கள் இந்தியா வந்தடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலேசியா, பிலிப்பைன்சில் இருந்து இந்தியா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். குறிப்பாக, தமிழர்க மாணவர்கள் அதிக அளவில் அங்கு மருத்துவம் படித்து வருகிறார்கள்.
அங்கு கல்லூரிகள் மூடப்பட்டதால் அங்கிருந்து 185 இந்திய மாணவர்கள் திங்கட்கிழமை இரவு இந்தியாவுக்கு புறப்பட்டனர். இவர்கள் வந்த விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் வந்து சேர்ந்தபோது இந்தியா விதித்துள்ள தடை தெரியவந்தது. இதனால் அவர்கள் 185 பேரும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். இதனால் அங்கு தவித்து வரும் மாணவர்கள் தாங்கள் நாடு திரும்ப இந்திய அரசு ஏற்பாடு செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்த வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மலேசியாவில் சிக்கித்தவிக்கும் மாணவர்களை விமானம் மூலம் மீட்கப்படுவர் என தெரிவித்தார்.
இந்நிலையில், மலேசியாவில் சிக்கித்தவித்த 150 தமிழக மானவர்கள் உள்ளிட்ட 185 பேர் ஏர் ஏசியா விமானம் மூலம் விசாகப்பட்டினம் வந்தடைந்தனர். அவர்கள் 28 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தி வைத்து கண்காணிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.