அஜீத் - விஜய் மீது அதிருப்தியில் ரசிகர்கள்!
அஜீத் - விஜய் மீது அதிருப்தியில் ரசிகர்கள்!

ரஜினி, கமலுக்கு பின்னர் அடுத்தடுதத இடங்களில் இருப்பவர்கள் அஜீத் - விஜய். இவர்களின் ரசிகர் வட்டமும் அவ்வளவு பெரியது. ஆனால் இவர்கள் எந்த ஒரு சமூதாய பிரச்சனைகளுக்கும் வெளிப்படையாக குரல் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அப்போதெல்லாம் அதற்க்கு பதிலடி கொடுத்த இவர்கள் ரசிகர்களே தற்போது இவர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.
அதற்க்கு காரணம் கொரானா குறித்து இது வரை இவர்கள் இருவரும் வாய் திறக்காதது தான். ரஜினி, கமல் இருவருமே கொரானா குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுள்ளனர். சூர்யாவும் விளக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அஜீத், விஜய் இருவருமே இதை பற்றி ஒன்றும் வாய் திறக்காதது ரசிகர்களை அதிருப்தியடை வைத்துள்ளது. தனது பெற்றோர்களோ, மற்றவர்களோ கூறுவதை கூட கேட்காத இவர்கள் ரசிகர்கள், இவர்கள் கூறினால் நிச்சயம் அதனை பின்பற்றுவார்கள் என்பதால் மேலும் தாமதிக்காமல் இவர்கள் குறைந்த படசம் ஓர் அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசியல் ஆசை இருக்கும் விஜயும், நீண்ட வருடங்களாகவே தன்னை தனிமை படுத்தி கொண்டிருக்கும் அஜீத்தும் இது பற்றி பேசுவார்களா? பொருத்திருந்து பார்ப்போம்.