Kathir News
Begin typing your search above and press return to search.

போலி செய்தியை பரப்பி அவதூறு செய்து கையும் களவுமாக பிடிபட்ட Alt News இணையதளம்!

தாங்களே மாட்டிக்கொண்டு பல முறை மூக்குடைபடுவதும் அவர்களுக்கு சகஜமான ஒன்று.

போலி செய்தியை பரப்பி அவதூறு செய்து கையும் களவுமாக பிடிபட்ட Alt News இணையதளம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 3:28 AM GMT

உண்மையை சரி பார்க்கும் வலைத்தளம் என்ற போர்வையில், இடது சாரிகளும் இஸ்லாமியவாதிகளும் நிரம்பிய AltNews வலைத்தளம் தங்கள் கருத்தியலுக்குள் ஒத்துவராத ஊடகங்களை போலி செய்திகள் என்று முத்திரை குத்துவது வழக்கமான ஒன்றாகும். தாங்கள் விரித்த வலையில் தாங்களே மாட்டிக்கொண்டு பல முறை மூக்குடைபடுவதும் அவர்களுக்கு சகஜமான ஒன்று. இம்முறை இந்த இரண்டு விஷயங்களும் ஒரே சம்பவத்தில் நடந்துள்ளன.

அயோத்தியில், ஆகஸ்ட் 5-ம் (நேற்று) நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள பிரபல டைம் ஸ்கொயர் கட்டிடத்தில் அமெரிக்க இந்துக்கள் ஒன்றிணைந்து ராமர் படத்தையும் ராமர் கோவிலில் மாதிரி படத்தையும் பில்போர்டில் ஒளிபரப்புவார்கள் என்று பரவலாக அறியப்பட்டது.

இதனால் உற்சாகம் அடைந்த பலரும், பல ஊடகங்களும் டைம்ஸ் ஸ்கொயர் கட்டிடத்தில் ராமர் படம் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பல புகைப்படங்களையும் போட்டோஷாப் அல்லது சூப்பர் இம்போஸ் செய்து வெளியிட்டனர். பல முன்னணி பிரதான ஊடகங்களும் இதில் அடக்கம்.


அதைப் படிப்பவர்கள் அனைவருக்கும் அது ஒரு சித்தரிப்பு புகைப்படம் மட்டுமே என்பதும் அது போட்டோஷாப் அல்லது சூப்பர் இம்போஸ் செய்யப்பட்ட ஒரு புகைப்படம் என்பதும் தெளிவாக தெரிந்தது. இந்த புகைப்படத்தை எடுத்து பகிர்ந்து கொண்ட ஒருவர் உண்மையாகவே டைம்ஸ் ஸ்கொயரில் இந்த புகைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டதாக செய்திகளை பகிர்ந்தார். இதை போலி செய்தி என்று நிரூபிப்பதற்காக 'AltNews' களமிறங்கி 'விசாரணை' நடத்தியது.

இது போலி செய்தி என்று கூறி, இந்த புகைப்படம் முதல் முதலில் கதிர் நியூஸ் வலைதளத்தில் வெளிவந்தது என்று குறிப்பிட்டிருந்தது. அந்த கட்டுரையை வாசித்தாலே அது சித்தரிப்பு புகைப்படம் என்பதும் பல பிரதான ஊடகங்களில் வந்ததைப் போலவே சூப்பர் இம்போஸ் செய்யப்பட்டது என்பது தெளிவாகத் தெரியும் என்றாலும், கதிர் செய்திகள் போலி செய்திகளைப் பரப்பினர் என்ற பார்வையில் அவதூறு செய்துள்ளனர்.




டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள பில் போர்டில் ராமபிரான் புகைப்படங்கள் காட்டப்பட போவது இல்லை என்று 'altnews' ஆணித்தரமாக வெளியிட்டிருந்த செய்தி தான் கடைசியில் போலி செய்தியானது. உண்மையில் சொன்னபடியே, ராமர் கோவிலின் மாதிரியும் ராமபிரானும் டைம்ஸ் ஸ்கொயர் சதுக்கத்தில் இருக்கும் மிகப்பெரிய பில் போர்டில் நேற்று காட்சியளித்தனர்.

தாங்களே போலி செய்திகளை பரப்பி கொண்டு, மற்றவர்களுக்கு போலி செய்தி பட்டம் கொடுக்கும் இவர்களின் 'ராஜதந்திரம்' இதன் மூலம் மறுபடியும் வெளிப்பட்டுள்ளது. இத்தகைய அவதூறை கதிர் செய்திகள் வன்மையாக கண்டிப்பதுடன் altnews இதற்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று எதிர்பார்க்கிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News