Kathir News
Begin typing your search above and press return to search.

வீடு தேடி வரும் உணவு சேவை தொழில்: அமேசான் களம் இறங்குவதால் ஸ்விக்கி , சொமேட்டா நிறுவனங்கள் கவலை!!

வீடு தேடி வரும் உணவு சேவை தொழில்: அமேசான் களம் இறங்குவதால் ஸ்விக்கி , சொமேட்டா நிறுவனங்கள் கவலை!!

வீடு தேடி வரும் உணவு சேவை தொழில்: அமேசான் களம் இறங்குவதால் ஸ்விக்கி , சொமேட்டா நிறுவனங்கள் கவலை!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  31 July 2019 1:00 PM GMT


தொடர்ந்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற வேண்டும் என்றும், இருக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் வர்த்தகம் பெற வேண்டும் என்றும் அமேசான் இந்தியா நிறுவனம் தனது சேவைகளை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
இதன் படி தற்போது அமேசான், இந்தியாவில் பரபரப்பாக இருக்கும் ஆன்லைன் உணவு டெலிவரி துறையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் உபர் ஈட்ஸ் வர்த்தகத்தை முழுமையாக வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பக்கட்டத்தில் உள்ளது என்று இரு அமெரிக்க நிறுவனங்களும் ஒப்புக்கொண்டு உள்ளது.
ஏற்கனவே ஸ்விக்கி மற்றும் சோமேட்டோ நிறுவனங்கள் மத்தியில் கடுமையான போட்டி இருக்கும் நிலையில், தற்போது இந்தப் போட்டியில் அமேசான் நிறுவனமும் இறங்கியுள்ள நிலையில் போட்டி மேலும் அதிகமாகும் என எதிர்பார்க்கப்படும் எனத் தெரிகிறது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News