Top
undefined
Begin typing your search above and press return to search.

"இங்கிருக்கும் முஸ்லிம்கள், பாகிஸ்தானுக்கு போக வேண்டும்" - அம்பேத்கர் அன்று சொன்னது, இன்று வைரல் ஆனது!

இங்கிருக்கும் முஸ்லிம்கள், பாகிஸ்தானுக்கு போக வேண்டும் - அம்பேத்கர் அன்று சொன்னது, இன்று வைரல் ஆனது!

Kathir EditorBy : Kathir Editor

  |  14 Feb 2020 4:16 AM GMT

நமது நாடு, மதத்தின் அடிப்படையில் இந்தியா, பாகிஸ்தான் என்று இரண்டு நாடுகளாக பிளவுபட்டபோது, முக்கிய தலைவர்கள் இருவேறு கருத்துக்களை முன்வைத்தனர். அதில் ஒரு சாரார், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும். அது போல பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சைனர்கள் போன்றவர்களை இந்தியாவிற்கு அழைக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இந்த கருத்தை முதன்முதலில் முன்வைத்தவர் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர். இது தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டிருப்பதாவது:-

வாழ்கின்ற நாடு தனது நாடு என்று முஸ்லிம்கள் ஒருபோதும் நினைக்க மாட்டார்கள். முஸ்லிம் மதம் எங்கு இருக்கிறதோ, அதுதான் தங்களின் நாடு என்று நினைப்பவர்கள் அவர்கள். அதாவது இந்தியாவை தங்களின் தாய் நாடாக முஸ்லிம்கள் கருதுவதற்கு முஸ்லிம் மதம் அனுமதிக்காது. இந்துக்களை தங்களின் சகோதரர்களாகவோ, அல்லது உறவினராகவோ முஸ்லிம்கள் கருதுவதற்கு அவர்களின் மதம் ஒருபோதும் அனுமதிக்காது. அதனால்தான் பிரபல இந்தியரான மௌலானா முகமது அலி, தான் இறந்தபிறகு தனது உடலை ஜெருசலத்தில் புதைப்பதை விரும்பினார். இந்தியாவில் அவரது உடலை புதைக்க வேண்டும் என்று அவர் விரும்பவில்லை.

எனவே இந்தியாவில் இருக்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு போகவேண்டும். அதுபோல பாகிஸ்தானில் உள்ள இந்துக்கள், சீக்கியர்கள் உள்பட முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினர் இந்தியாவிற்கு வர வேண்டும்.

http://www.columbia.edu/itc/mealac/pritchett/00ambedkar/ambedkar_partition/412d.html

(Pakistan and Partition of India - chapter 5&6)

இவ்வாறு டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

இது இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Next Story