அமெரிக்கா பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!
அமெரிக்கா பெண் புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி!

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ். இதனால் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 69 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் அமெரிக்காவில் தான் மூன்று லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள் அனைவரும் தங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த கொரோனா வைரஸ் விலங்குகளை பாதிக்காது என்று பலரும் பேசப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் இருக்கும் பெண் புலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த உயிரியல் பூங்காவில் பணியாற்றும் ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. இதனால் இந்த நபரின் மூலமாக புலிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் சில புலிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
பூங்காவில் இருக்கும் அனைத்து விலங்குகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.