Begin typing your search above and press return to search.
அமேதியில் புதிய மருத்துவக்கல்லூரி - சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஸ்மிரிதி ஈரானி!
அமேதியில் புதிய மருத்துவக்கல்லூரி - சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் ஸ்மிரிதி ஈரானி!

By :
அமேதி தொகுதியில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தான் அறிவித்துள்ளார். இதற்கு அத்தொகுதியின் எம்பியும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சருமான ஸ்மிரிதி ஈரானி தனது ட்வீட்டர் பக்கத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
43 ஆண்டுகளுக்கு முன்னர் அமைச்சர் ஹர்ஷவர்தன் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருந்த போதே அமேதி தொகுதி தேர்தலில் சஞ்சய் காந்திக்கு எதிராக பிரசாரம் செய்தார். குறிப்பாக அமேதி தொகுதி காந்தி குடும்பத்தினருக்கு சாதகமான தொகுதி என கூறப்படுவது உண்டு. இந்நிலையில் 43 வருடங்களுக்கு பின் காங்கிரசின் கோட்டையாக கருதப்பட்ட அமேதியில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிட்ட ஸ்மிரிதி ஈரானி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story