டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் இவர்கள்தான்! அமித்ஷா பேச்சால் மக்களவையில் சலசலப்பு
டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் இவர்கள்தான்! அமித்ஷா பேச்சால் மக்களவையில் சலசலப்பு

தில்லி வன்முறையை கட்டுப்படுத்த தவறியதாக கூறி உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த விவாதத்துக்கு பதிலளித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பின்னர் பேசியதாவது:
வடகிழக்கு தில்லி வன்முறையில் 52 பேர் பலியாகினர். 526 பேர் காயமடைந்தனர். இது மிகவும் வருத்தத்திற்குரியது. தில்லி வன்முறையில் ஹவாலா பணம் அதிக அளவில் விளையாடியுள்ளது. இதற்குப் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்து கண்டறிய இரண்டு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டு புலனாய்வு நடந்து வருகிறது. வன்முறையாளர்கள் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்.
கடந்த ஆண்டு டிசம்பர் 14-ஆம் தேதி, ராம்லீலா மைதானத்தில்தான் எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் வெறுப்பூட்டும் பேச்சை தொடங்கினார். கடந்த பிப்ரவரி மாதம் 19 முதல் 22-ஆம் தேதி வரையிலும் அதேமாதிரியான வெறுப்பூட்டும் பேச்சு தொடர்ந்தது. இந்நிலையில், வெறுப்பூட்டும் பேச்சு பேசி இந்த வன்முறை உண்டாக காரணமானவர்கள் காங்கிரஸார்தான் என்று ஏன் சொல்லக்கூடாது என்றார்.
இந்த நிலையில், ராம் லீலா மைதானத்தில் வெறுப்பூட்டும் பேச்சை முதலில் தொடங்கியதாக அமித் ஷா குறிப்பிட்டு பேசியது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைதான் என எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் இருந்து நேற்று வெளிநடப்பு செய்தனர்.