Kathir News
Begin typing your search above and press return to search.

தி.மு.க வினர் தூக்கத்தை கெடுத்த அமுதா ஐ.ஏ.எஸ் பிரதமர் அலுவலக நியமனம், மோடி மேஜிக்கா? #AMUDHAIAS #PMMODI #MKStalin #DMK

தி.மு.க வினர் தூக்கத்தை கெடுத்த அமுதா ஐ.ஏ.எஸ் பிரதமர் அலுவலக நியமனம், மோடி மேஜிக்கா? #AMUDHAIAS #PMMODI #MKStalin #DMK

தி.மு.க வினர் தூக்கத்தை கெடுத்த அமுதா ஐ.ஏ.எஸ் பிரதமர் அலுவலக நியமனம், மோடி மேஜிக்கா? #AMUDHAIAS #PMMODI #MKStalin #DMK

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 July 2020 2:41 AM GMT

தமிழகத்தில் இன்னும் ஒரு ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் தமிழகத்தில் நடைபெறும் சில அதிரடி மாற்றங்கள் தமிழக கட்சிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளன அதிலும் குறிப்பாக தி.மு.கவை நிலைகுலையச் செய்துள்ளன.

கொரோனா காரணமாக ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் தள்ளிப்போகலாம் என்று கூறப்படும் நிலையில், தற்போதைய மாற்றங்கள் தி.மு.கவையும் அதன் பிரச்சார வியூகம் வகுக்கும் அமைப்பையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளன. தமிழகத்தில் நீண்டகாலம் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது பூர்வீகம் மதுரை. 1994ஆம் ஆண்டு ஐஏஎஸ் பயிற்சியை முடித்தவர். திறமையானவர் என்று அ.தி.மு.க- தி.மு.க என இரண்டு கட்சி ஆட்சியாளர்கள் இடையே பெயரெடுத்தவர். இது ஒருபுறமிருக்க திமுக அதிர்ச்சியடைய முக்கியக் காரணங்கள் உள்ளன. அதில் அமுதாவும் ஒருவர். கருணாநிதி மறைந்தபோது அவரது இறுதிச் சடங்கை கவனித்தவர் அமுதா. 2021 தேர்தலை சந்திக்க பிரசாந்த் கிஷோரிடம் ஒப்பந்தம் செய்து திமுக. அதன் பிறகு தமிழகத்தில் முன்னணி ஊடகங்கள் கொண்டு தங்களுக்கு சாதகமான செய்திகளை வெளியிடுவதாக கூறப்பட்டது.

கடந்த தேர்தலில் தி.மு.க, பா.ஜ.க ஒரு மதவாத கட்சி என்ற பிரச்சாரத்தை முன்வைத்தது. நாடாளுமன்ற தேர்தலில் இந்திய அளவில் பெரும்பான்மை பெற்ற பா.ஜ.க தமிழகத்தில் குறிபிட்ட வாக்கினை பெற முடியவில்லை இதற்க்கு மத்நிய அரசின் மீது அவதூறுகள் சராமரியாக அது பெய்யே ஆயினும் பரப்பியதால் வந்த வினை என்பது அனைவருக்கும் தெரியும். இது போலவே ஒரு வியூகத்தை வைத்து தி.மு.கவில் தேர்தலில் வீழ்த்த பல அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. இதன் முக்கிய எதிரொலிதான் அமுதா ஐஏஎஸ். பிரதமர் இணைச் செயலாளராக பிரதமர் அலுவலகம் நியமித்தது தமிழகம் குறித்து அனைத்து விபரங்களையும் அறியத்தான் என தி.மு.க தரப்பு பயம் கொள்கிறது.

இனிவரும் நாட்கள் ஒவ்வொன்றும் மேற்கு வங்கத்தில் ஒரே வருடத்தில் இந்த எழுச்சி போல் பல அதிரடி மாற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறும் என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள். தேர்தல் நெருங்கும் நேரத்தில் மோடியின் அரசியல் வியூகம் தமிழகத்தில் ஆரம்பமாகும் என கூறப்பட்ட நிலையில் தொடர்ந்து மோடி தமிழக அரசியலில் கவனம் செலுத்துவதும், தமிழகத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பிரதமர் அலுவலகத்தில் நியமனம் செய்யப்படுவதும் ஸ்டாலின் தூக்கத்தை மட்டுமல்ல தி.மு.க முக்கியப்புள்ளிகளின் தூக்கத்தை கெடுத்துள்ளன. எது என்னவென்று அந்த ஆண்டவனின் முடிவு செய்வான்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News