Kathir News
Begin typing your search above and press return to search.

#JusticeForAnaikaraiMuthu தமிழக ஊடகங்கள் மௌனமாக இருப்பதேன்? எதிர்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதேன்? சாத்தான்குளத்திற்கு மட்டும் தான் வழி தெரியுமா? : ஷ்யாம் கிருஷ்ணசாமி அடுக்கடுக்கான கேள்விகள்..!

#JusticeForAnaikaraiMuthu தமிழக ஊடகங்கள் மௌனமாக இருப்பதேன்? எதிர்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதேன்? சாத்தான்குளத்திற்கு மட்டும் தான் வழி தெரியுமா? : ஷ்யாம் கிருஷ்ணசாமி அடுக்கடுக்கான கேள்விகள்..!

#JusticeForAnaikaraiMuthu தமிழக ஊடகங்கள் மௌனமாக இருப்பதேன்? எதிர்கட்சிகள் கண்டும் காணாமல் இருப்பதேன்? சாத்தான்குளத்திற்கு மட்டும் தான் வழி தெரியுமா? : ஷ்யாம் கிருஷ்ணசாமி அடுக்கடுக்கான கேள்விகள்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 July 2020 2:24 AM GMT

தென்காசி மாவட்டத்தில் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்த விவசாயி 72வயதான அணைக்கரை முத்து. இவர் தனது வீடு அருகே உள்ள தோட்டத்தில் மின்வேலி அமைத்ததாக கூறப்பட்டதையடுத்து கடையம் வனத்துறையினர் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அப்போது அணைக்கரை முத்துவுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அவரை தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

விசாரணையின் போது மர்மமான முறையில் அணைக்கரை முத்து உயிரிழந்ததை அடுத்து, அவரது உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அணைக்கரை முத்துவின் உடல் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வனத்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது உயிரிழந்த அணைக்கரை முத்து குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்கப்படும்" என்றும் தெரிவித்துள்ளார். எனினும் அரசின் உதவியை அணைக்கரை முத்துவின் உறவினர்கள் வாங்க மறுத்துள்ளனர். நீதி கிடைக்கும் வரை அவர்கள் போராட முடிவு செய்துள்ளனர்.



இது குறித்து புதிய தமிழகம் கட்சியை சேர்ந்த டாக்டர்.ஷியாம் கிருஷ்ணசாமி தமிழக அரசிற்கும், ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில், "தமிழகத்தில் மீண்டும் ஒரு Custodial murder. 65 வயதான விவசாயி அணைக்கரைமுத்து என்பவரை வனக்காவலர்கள் இரவு அழைத்து சென்று இரண்டு மணி நேரத்தில் மரணம். உடலில் 18 காயங்கள். 302 பதிவு செய்ய அரசு மறுப்பு. தி.மு.க கள்ள மௌனம்? உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம். உறங்கிகொண்டிருந்த விவசாயியை இரவு 10 மணிக்கு மேல் விசாரனைக்கு அழைத்து சென்று வனக்காவலர்கள் அடித்து கொலை. நான்கு நாட்கள் ஆகியும் இன்னும் காவலர்கள் மீது 302 கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படாமலும் இருப்பது அவர்களை பாதுகாப்பதற்கு ஒப்பானதாகும். உறவினர்களை மிரட்டி வெத்து காகிதத்தில் கையெழுத்து வாங்கியுள்ளனர் காவலர்கள். எளிய மக்கள் என்ன செய்துவிட போகிறார்கள் என்ற ஏளனம். அ.தி.மு.க அரசு உடனே வனக்காவல்கள் மீது 302 வழக்கு பதிவு செய்யவேண்டும்.



தமிழக ஊடகங்கள் மௌனமாக இருப்பதேன்? எதிர்கட்சிகள் கண்டும்கானாமல் இருப்பதேன்? சாத்தான்குளத்திற்கு மட்டும் தான் வழி தெரியுமா? அ.தி.மு.க அரசு அதிகாரத்தால் கொலை செய்யப்பட்ட விவசாய குடும்பத்தின் குரல் கேட்கவில்லையா? சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை போல, இவ்வழக்கையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைத்து, மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். வயலில் வேலி அமைத்தது தொடர்பாக விசாரிக்க இரவு 10 மணிக்கு மேல் விசாரிக்க என்ன தேவை? உறவினர் யாருக்கும் தெரியாமல் கைது செய்தது ஏன்? ஆரோக்கியத்துண்டன் விவசாயம் பார்த்தவர் கைதுக்கு பிறகு மரணம் எப்படி? உடலில் காயம் எப்படி வந்து?", என்று அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.





தமிழக ஊடகங்கள் மற்றும் எதிர்கட்சிகளை விமர்சித்து அவர் மேலும் பதிவிடுகையில், "மதம் பார்த்து, சாதி பார்த்து, அரசியல் லாபம் பார்த்து தான் அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள் என்றால் நீங்களும் குற்றவாளியே... ஆளும் அ.தி.மு.க-விற்கு எதிராக சின்ன விசயம் கிடைத்தாலம் ஊதி பெரிதாக்கும் தி.மு.க-வும் எதிர்கட்சிகளும் தென்காசி அணைக்கரைமுத்து காவல் நிலைய படுகொலை விசயத்தில் மௌனமாக கடந்த செல்ல காரணம் என்ன? நடிகர், நடிகைகள் உருக்கமாக பேசினால் தான் மனது உறுத்துமா? சாதாரன மக்களின் வழி மிகுந்த பேச்சுக்கு எல்லாம் உங்கள் மனசாட்சி இடம் கொடுக்காத? காவலர்களால் கொலை செய்யப்பட்ட ஏழை விவசாயிக்கு நியாயம் கிடைக்க குரல் கொடுங்கள்...", என்று கேட்டுக்கொண்டுள்ளார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News