Kathir News
Begin typing your search above and press return to search.

"அண்டாவ காணோம்" படம் OTT தளத்தில் எப்போது வெளியீடு? #AndavaKanom

"அண்டாவ காணோம்" படம் OTT தளத்தில் எப்போது வெளியீடு? #AndavaKanom

அண்டாவ காணோம் படம் OTT தளத்தில் எப்போது வெளியீடு? #AndavaKanom

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  6 Aug 2020 3:01 AM GMT

'அண்டாவ காணோம்' படம் OTT-யில் ரிலீஸ். இந்த படத்தில் திமிரு படத்தில் நெகட்டிவ் கேரக்டராக நடித்த ஸ்ரேயா ரெட்டி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் இவர் ஒரு முழுமையான படத்தொகுப்பை கொண்டவராக இருப்பார் என கூறப்படுகிறது.

வேல்மதி என்பவர் இயக்கத்தில் இந்த படம் 2018-ஆம் ஆண்டு ரிலீஸுக்கு ரெடியாக இருந்தது. ஆனால் ரிலீஸ் செய்ய சில தடைகள் வந்ததை அடுத்து தற்பொழுது OTT- யில் வெளியாக உள்ளது என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

அண்டாவ காணோம் திரைப்படம் ஆகஸ்டு 28-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக போவதாக அறிவித்து இருக்கின்றனர்.அதனை அடுத்து இந்த படத்தின் பிரமோஷன்கள் தொடங்கவுள்ளனர்.

ஜேஎஸ்கே ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரித்துள்ள இந்த படத்தில் அஸ்வமேத்ரா என்பவர் இசையமைத்திருக்கிறார்.

இந்தப்படம் ஸ்ரேயா ரெட்டிக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என அவர் எதிர்பார்த்து இருக்கிறார் மேலும் இந்த படத்தை அவர் மிகவும் எதிர்பார்த்த திரைப்படமாக அவர் கூறுகிறார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News