நயன்தாரா மீது கொலகாண்டில் இருப்பது... யார் ?
நயன்தாரா மீது கொலகாண்டில் இருப்பது... யார் ?

நயன்தாரா மீது கொலகாண்டில் இருக்கிறது தமிழ் படத்தயாரிப்பு தரப்பு !
காரணம்., " தான் நடிக்கும் திரைப்படங்களின் டீஸர் வெளியீடு , டிரைலர் வெளியீடு, ஆடியோ வெளியீடு உள்ளிட்ட புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டேன் " என ஸ்டிரிக்டாக விரதம் இருந்து வரும் நயன்தாரா ., பல கோடிகளை சம்பளமாக வாங்கிக்கொண்டு தான் நடிக்கும் படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அறவே தவிர்த்து வருகிறார் என்பது தெரிந்த கதை!
ஓ.கே.!
அதே மாதிரி , 'தான் பொது விழாக்களிலும் பங்கேற்க மாட்டேன்... ' என கூறி வந்த நயன் ., சமீபமாக பெண்கள் தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் நடந்த மகளிர் ஊர்வலத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்து வலம் வந்ததுதான் தயாரிப்பாளர்களின் இந்த கொலகாண்டிற்கு காரணம்.
இது கேள்விப்பட்டு .,
"ஹலோ புரடியூசர்ஸ்... அது, வருமான வரித்துறையினர் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு. அதில், நயன் அம்மணி கலந்து கொள்ள மறுத்தால் ., என்னாகும்? என்பதை சொல்லவும் வேண்டுமா .?! ''என புலம்பும் புரடியூசர்ஸுக்கு போன் போட்டு விளக்கம் சொல்லி வருகிறாராம் நயனின் 'ஏ டூ இசட் 'ஆன டைரக்டர் விக்னேஷ் சிவன்! அட, அது சரிதானே (விஜய்க்கு வந்த கதி நயனுக்கும் வந்தால் என்னாகும் ? பாவம்!) .?!