கமலுடன் மீண்டும் இனையும் அனிருத்..
கமலுடன் மீண்டும் இனையும் அனிருத்..

திறமையானவர்களைக் கண்டறிந்து அவர்களுடன் பணிபுரிவதில் கமல் வல்லவர். அப்படி அவர் இனைந்து பணிபுரிந்த இசையமைப்பாளர்கள் ஏராளம். அப்படி சமீபத்தில் அவர் பயணித்து வந்த இசையமைப்பாளர் ஜிப்ரான். கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு ஜிப்ரான் இசையமைத்து வந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டார் அனிருத்.
இந்நிலையில் மீண்டும் கமலுடன் அனிருத் மீண்டும் இனையவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இம்முறை படத்திற்காக அல்ல. கரோனா விழிப்புணர்வுக்காகப் பாடல் ஒன்றை உருவாக்கி வருகிறார் அனிருத். இதில் பாடக் கமலிடம் அனிருத் கோரிக்கை விடுக்க, அவரும் பாட ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து கமல் தனது வீட்டிலேயே பாடி அனிருத்துக்கு அனுப்ப தற்போது அதனை இறுதி செய்வதில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார் அனிருத். விரைவில் அந்த பாடல் வெளியாகவிருக்கிறது.