Kathir News
Begin typing your search above and press return to search.

குழந்தையின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய துடிக்கும் தி.மு.க? ட்விட்டரில் ட்ரெண்டாகும் #பிணந்திண்ணி_திமுக ! கொதித்தெழுந்த தமிழர்கள்! #RIPSujith

குழந்தையின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய துடிக்கும் தி.மு.க? ட்விட்டரில் ட்ரெண்டாகும் #பிணந்திண்ணி_திமுக ! கொதித்தெழுந்த தமிழர்கள்! #RIPSujith

குழந்தையின் பிணத்தை வைத்து அரசியல் செய்ய துடிக்கும் தி.மு.க? ட்விட்டரில் ட்ரெண்டாகும் #பிணந்திண்ணி_திமுக ! கொதித்தெழுந்த தமிழர்கள்! #RIPSujith

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  29 Oct 2019 10:28 AM GMT


தி.மு.க தலைவர் சிறிதும் பொறுப்பின்றி குழந்தை சுஜித்தின் பிணத்தை வைத்து அரசியல் லாபம் அடைய முயற்சிப்பது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.


திருச்சி மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் இருந்த தோட்ட்த்தில், ஆழ்துளைக் கிணற்றில் குழந்தை சுஜித் தவறி விழுந்தான். அந்த குழந்தையை மீட்கும் பணி கிட்டத்தட்ட 80 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று தோல்வியடைந்தது. குழந்தை சுஜித்தின் உடல் மீட்கப்பட்டு பொது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.


அந்த இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் பேச்சு இந்த துயர சம்பவத்தை எப்படியேனும் அரசியலாக்கி, அதில் லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசியது புலப்படுகிறது.


சுஜித்தை காப்பாற்ற NDRF அழைக்கப்பட்டு இருந்தும் "ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை?" என பொது அறிவு இன்றி கேள்வி எழுப்பினார்.




https://twitter.com/KathirNews/status/1189091603673051136?s=20


இந்நிலையில் "ஓடி விளையாட வேண்டிய சிறுவன் சுஜித்தை மயானத்திற்கு கொண்டு போய் விட்டது அதிமுக அரசு" என மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.


குழந்தை சுஜித்தை காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் இரவு பகல் பாராமல் 800 பேருக்கு மேல் எடுத்ததும், அமைச்சர், ஆட்சியாளர் உட்பட பல நூறு அதிகாரிகள் களத்தில் இருந்து அனைத்து முயற்சிகளையும் எடுத்ததை தமிழகமே பார்த்தது. அப்படி இருந்தும், இவ்வாறு கேவலமான அரசியல் ஆதாயம் தேடுவது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.


இதையடுத்து தமிழர்கள் #பிணந்திண்ணி_திமுக என்ற ஹேஷ்டேக்குடன் தி.மு.க கட்சிக்கு தங்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.




Next Story
கதிர் தொகுப்பு
Trending News