கொரோனாவை காட்டி இனி ஒரு இந்திய கம்பெனி மீது கூட சீனா கை வைக்க முடியாது - சதி வேலைக்கு முட்டுக்கட்டை போட்ட அரசின் அதிரடி நடவடிக்கை!
கொரோனாவை காட்டி இனி ஒரு இந்திய கம்பெனி மீது கூட சீனா கை வைக்க முடியாது - சதி வேலைக்கு முட்டுக்கட்டை போட்ட அரசின் அதிரடி நடவடிக்கை!

அன்னிய நேரடி முதலீடு விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. நிறுவன உரிமைகளை மாற்றம் செய்வதற்கும் இந்திய அரசின் அனுமதி அவசியம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் அல்லது ஒரு நபர் எந்தவொரு துறையிலும் முதலீடு செய்யலாம் என்று இருந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டு , இனி அரசாங்க ஒப்புதல் அவசியம் என்று வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போதைய கொரோனா தொற்றுநோயால் இந்திய நிறுவனங்கள் "சந்தர்ப்பவாத கையகப்படுத்துதல்" ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையை அரசாங்கம் மதிப்பாய்வு செய்துள்ளது.
சீன நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது குறித்து இந்திய கார்ப்பரேட்டுகள் கவலை தெரிவித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்தே சீன தனிநபர்களையும் நிறுவனங்களையும் புதிய நெறிமுறையின் கீழ் திறம்பட கொண்டு வந்தது மத்திய அரசு.
இப்போது வரை, பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வரும் முதலீடுகளுக்கு மட்டுமே அரசாங்க அனுமதி கட்டாயமாக இருந்தது. தற்போது அதில் சீனாவும் இணைக்கப்பட்டுள்ளது.
Any Chinese entity can now invest in India only through the government route. The government of India reviews its FDI policy to curb opportunistic takeovers/acquisitions of Indian companies. @WIONews https://t.co/LuWDWltM84 pic.twitter.com/KAc8ZwxHGv
— Palki Sharma (@palkisu) April 18, 2020