பணத்தை சேமிக்க வேண்டுமா? உங்களுக்கு உதவும் செல்ல APP கள்
பணத்தை சேமிக்க வேண்டுமா? உங்களுக்கு உதவும் செல்ல APP கள்
மிண்ட் (MINT) உங்கள் பணத்தை நிர்வகிக்க ஓர் சிறந்த செயலி
இணையத்தில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலி, சிறப்பான பட்ஜெட் இடுவதற்க்கு, நம் செலவீனங்களை பின் தொடர்வதற்க்கு பெரிதும் உதவுகிறது. இந்த செயலி அனைத்து வங்கி தரவுகளையும் சேமிக்க முடியுமாம். இதன் மூலம் நம் மாதாந்திர பில் தொகைகளை செலுத்த இயலுமாம். இதன் மூலம் பல தரப்பட்ட வலைதளங்களுக்கு செல்ல வேண்டியதில்லை. இந்த ஒரே செயலின் மூலம் அனைத்து பில் நிலுவைகளும் செலுத்த முடியும் என்கிறார்கள் இதை பயன்படுத்தியவர்கள்.
ஒரு முறை நீங்கள் உள்ளீடு செய்துவிட்டால், பின் நீங்கள் எவ்வளவு செலுத்த வேண்டும், எப்போது செலுத்தவேண்டும் என அனைத்து தரவுகளுடன் தயாரக இருக்குமாம் இச்செயலி. அவ்வப்போது உங்கள் உதவியாளர் போல செலுத்த வேண்ட நிலுவைகளுக்கு நினைவூட்டல்களையும் நிகழ்த்தும் என்கிறார்கள் இதன் பயன்பாட்டாளர்கள்.
வாலி (Wally) செலவீனங்களை பின் தொடர்ந்து பதிந்து வைக்க சிறந்த செயலி
செலவுகளை சரியாக பதிவு செய்து ஓர் ஒழுங்குடன் நிர்வகிக்க விரும்பும் நபர் நீங்கள் எனில் இதை முயற்சித்து பார்க்கலாம். இதுவும் இலவசமாக கிடைக்கிற செயலி. இதில் இருக்கும் சிறப்பு அம்சம், நீங்கள் ஒவ்வொறு இலக்க எண்ணையும் கையால் அழுத்தி தட்டச்சு செய்ய வேண்டியதில்லை. நீங்கள் அந்த குறிப்பிட்ட இரசீதை படம்பிடித்தாலே போதும். அந்தந்த இலக்க எண்கள் அந்தத்த கட்டத்தில் சரியாக பொருந்தி தட்டச்சு பிழைகள் இல்லாமல் சரியான அறிக்கையை உங்களுக்கு வழங்கும்.
மற்றும் பிட்காயின் பயன்படுத்த விரும்போருக்கு "காயின் பேஸ்"
முதலீடுகளுக்கு "ராபின்ஹுட்"
சேமிப்புக்கு உகந்ததாக "ஏக்ரான்ஸ்"
போன்ற ஏராளமான செயலிகள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் ஸ்டோர்களில் கொட்டி கிடக்கின்றன. அதன் சாதக பாதகங்களை அலசி, நமக்கு பாதுகாப்பாகவும், சாமர்த்தியமாகவும் பயன்படுத்துவது தான் சவாலே!!