ரெஸ்ட் எடுத்தெடுத்து டையர்ட் ஆகிட்டீங்களா? அப்ப அவசியம் படிங்க
ரெஸ்ட் எடுத்தெடுத்து டையர்ட் ஆகிட்டீங்களா? அப்ப அவசியம் படிங்க
வீட்டில் முடங்கியிருக்கும் வேளையில் என்ன தான் வர்க் ஃப்ரம் ஹோம் செய்தாலும் கூட அசதியும் , மனசோர்வும் அதிகமாக இருக்கும் வேளை.
ஆங்காங்கே பல சுவாரஸ்ய மீம்ஸ்களையும், பல கற்பனையான நகைச்சுவை துணுக்குகளையும் காண முடிகிறது. இன்றைய காலகட்ட த்திற்கு ஏற்ற வசனம் என இதை சொல்லலாம் "rest எடுத்து rest எடுத்து tired ஆகிட்டேன்".
ஆனால் இதை நிஜமாகவே செயல்படுத்துகிற சோகம் ஆங்காங்கே நிகழத்தான் செய்கிறது. "ஓர் செயல்" அது செய்யப்படவேண்டிய காலத்தை நாம் "நாளை" என்று குறிக்கிற பொழுதே துவங்கிவிடுகிறது சோம்பேறித்தனம். வெற்றியை யாசிக்கிற மனிதர்களின் செயல்திறனை சிதைக்கிற சவாலான வார்த்தை சோர்வு. வெல்ல வேண்டும் என்ற எண்ணத்திற்க்கு வெறும் கனவு காண்கிற உள்ளம் மட்டும் போதாது... சுறுசுறுப்பாய் சுழன்று பணியாற்றுவதும்... சோர்வுக்கு ஓய்வுகொடுப்பதுமே நிரந்திர தீர்வு.
எனவே இந்த பிரச்சனையை எப்படி களைவது இந்த சோர்வு மேலும் நம்மை சோர்வடையச் செய்வதாய் இல்லாமல், இதில் ஆக்கபூர்வமான ஆற்றலை பெறுவது எப்படி? இந்த சோர்விலிருந்து முடங்கியிருக்கிறோம் என்கிற எண்ணத்திலிருந்தும் மீள்வதெப்படி என்கிற ஆயிரமாயிரம் கேள்விகள் நம் அனைவரின் மனதிலும் துளிர்த்து கொண்டிருக்கும் வேளையில் சில டிப்ஸ்களை இங்கே தொகுத்துள்ளோம்.
இது இந்த முடக்க காலத்தில் மட்டுமல்லாமல், சோம்பல் என்கிற நோயால் பீடிக்கப்பட்டிருக்கிற எந்தவொரு காலத்திற்கும் பொருத்தமானதாக அமையும். படிப்பதற்கு மிக எளிதான குறிப்புகளாக இருந்தாலும். சற்று ஆய்ந்து நோக்கினால் இது வழங்கும் ஆற்றல் மிக மிக அதிகம்.
சோம்பேறித்தனத்தை தூரத்தில் நிறுத்த...துடிப்புமிக்க செயல்கள் நிகழ்த்த நிபுணர்கள் சொல்லும் பத்து வழிகள் இங்கே...
• உடற்பயிற்சி செய்யுங்கள்
• முழுமையாக ஓய்வெடுங்கள்
• பரபரப்பான சூழலை உருவாக்கிகொள்ளுங்கள்
• உங்களை நீங்களே அங்கீகரிக்க துவங்குங்கள்
• இதை செய்யதவறினால் இழக்கப்போவது என்ன? என்பது குறித்து ஆராயுங்கள்
• சோர்வுரும் நேரத்தில் தூண்டுதலாய் அமையும் சரியான துணைவர்களை தேர்ந்தெடுங்கள்
• தனிமையிலும் வெறுமையிலும் இருப்பதை அறவே தவிருங்கள்
• பெரும் இலக்குகளை சிறியதாய் செதுக்குங்கள்
• உங்கள் வளர்ச்சியை பதிவுசெய்யுங்கள்
• மற்றவர்களின் வளர்ச்சியில் கவனம் வையுங்கள்
இவைகளை முயன்று பார்ப்போம், அனைத்தும் கடந்து போகும் என்னும் சொல்லுக்கு இணங்க இந்த கடின சூழலை நாம் அனைவரும் ஒன்றினைந்து வெல்வோம்.