Kathir News
Begin typing your search above and press return to search.

இனி எந்த காலநிலையிலும் இந்திய இராணுவம் துணிந்து அடிக்கும் - சியாச்சினுக்கு நிகராக பாதுகாப்பு வசதிகள் பெறும் லடாக் வீரர்கள்!

இனி எந்த காலநிலையிலும் இந்திய இராணுவம் துணிந்து அடிக்கும் - சியாச்சினுக்கு நிகராக பாதுகாப்பு வசதிகள் பெறும் லடாக் வீரர்கள்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Aug 2020 6:32 AM GMT

லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் இந்திய ராணுவ வீரர்களுக்கு, அதிக குளிர் மிக்க சியாச்சினில் பணியாற்றும் வீரர்களுக்கு கொடுக்கப்படுவதைப்போல குளிரைத் தாங்குவதற்கான வசதிகளைச் செய்துகொடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அண்மையில் கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில், ஆற்றின் கரையில் இருந்த முகாம்களை அகற்றிவிட்டு, இரண்டு கிலோமீட்டர் தொலைவுக்குச் சீன ராணுவத்தினர் பின்வாங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீன படைகள் தற்காலிகமாகப் பின்வாங்கினாலும், தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதப்படுவதால், லடாக்கில் கண்காணிப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன் ஒருபகுதியாக சியாச்சினில் பணியாற்றும் படைவீரர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டுள்ள வசதிகளைப் போல் லடாக்கிலும் ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டில் சியாச்சினில் நடந்த ஆபரேஷன் மேக்டூட்டுக்குப் பிறகு, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்களுக்கு பனி கண்ணாடிகள், பூட்ஸ் மற்றும் கையுறைகள் ஆகியவற்றுடன் கதகதப்பான உடை என்று அனைத்து தேவைகளையும் அரசு பூர்த்தி செய்கிறது.

அதே போல லடாக்கிலும் செய்து தரப்பட உள்ளது. இதற்காகக் குளிரைத் தாங்கும் வகையிலான உடைகள், பனிக்கூடாரம் ஆகியவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களிடம் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News