மீண்டும் 'தெகிடி' பட இயக்குனருடன் இனையும் அசோக் செல்வன்!
மீண்டும் 'தெகிடி' பட இயக்குனருடன் இனையும் அசோக் செல்வன்!

2014ம் ஆண்டு அசோக் செல்வன் நடிப்பில், இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்ற பெற்ற திரைப்படம் 'தெகிடி'. அசோக் செல்வனின் திரையுலக வாழ்கையில் மிக முக்கியமான படமாக திகழும் அப்படம் இன்றும் தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அவ்வளவு பெரிய வெற்றி கொடுத்த பின்னரும் அப்படத்தின் இயக்குனர் ரமேஷ் ஏன் அடுத்த படத்தை இயக்கவில்லை என்ற ஆதங்கம் ரசிகர்களிடத்தில் இருந்து வருகிறது.
அவர்கள் ஆதங்கத்தை போக்கும் வகையில் ரமேஷ் மீண்டும் அசோக் செல்வன் படத்தினை இயக்கவிருக்கிறார். தனது தனிபட்ட சில பிரச்சனைகளால் திரையுலகிலிருந்து சற்று விலகியிருந்த ரமேஷ் தற்போது மும்முரமாக திரைகதையை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறாராம். இப்படம் நிச்சயம் தெகிடியின் அடுத்த பாகம் இல்லை என கூறுபவர்கள், விரைவில் இப்படம் குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறுகின்றனர். 'ஓ மை கடவுளே' படத்தினை தொடர்ந்து 'ஃபேட் செஃப்' எனும் பைலிங்குவல் படத்தில் நடித்து வரும் அசோக் செல்வன் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் இதில் நடிக்க துவங்குவார் என தெரிகிறது.