Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 2.2 பில்லியன் டாலர் நிதி உதவி !

இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 2.2 பில்லியன் டாலர் நிதி உதவி !

இந்தியாவுக்கு ஆசிய வளர்ச்சி வங்கி 2.2 பில்லியன் டாலர் நிதி உதவி !

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 April 2020 2:41 AM GMT

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவிற்கு, 2.2 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்க உள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசாட்சுகு அசக்கவா கூறியுள்ளார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனான ஆலோசனை பிறருக்கு மசாட்சுகு அசக்கவா தெரிவித்ததாவது,

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலவி வரும் சூழ்நிலையில் இந்தியாவின் அவசர தேவைக்கு உதவி செய்ய ஆசிய வளர்ச்சி வங்கி முடிவெடுத்து இருப்பதாகவும், பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், முறைசாரா தொழிலாளர்கள், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், சுகாதாரத்துறை மற்றும் நீதித் துறைக்கு உதவிடும் வகையிலும் உடனடியாக 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 16.500 கோடி) நிதியுதவி செய்யப்படும் எனக் கூறி உள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள ஏழைகள், பெண்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைவருக்கும் உதவிடும் வகையில் மத்திய அரசு 1.7 லட்சம் கோடியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா என்ற திட்டம் மார்ச் 26ம் தேதியை அறிவித்த நிலையில் அதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசாட்சுகு அசக்கவா பாராட்டு தெரிவித்துள்ளது.

Next Story