Kathir News
Begin typing your search above and press return to search.

ATM கார்டைத் திருடி, பாஸ்வேர்ட் கேட்கச் சென்று மாட்டிக் கொண்ட திருடர்கள் - உத்தரப் பிரதேசத்தில் நடந்த குபீர் சம்பவம்!

ATM கார்டைத் திருடி, பாஸ்வேர்ட் கேட்கச் சென்று மாட்டிக் கொண்ட திருடர்கள் - உத்தரப் பிரதேசத்தில் நடந்த குபீர் சம்பவம்!

ATM கார்டைத் திருடி, பாஸ்வேர்ட் கேட்கச் சென்று மாட்டிக் கொண்ட திருடர்கள் - உத்தரப் பிரதேசத்தில் நடந்த குபீர் சம்பவம்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  24 July 2020 1:51 AM GMT

நொய்டாவில் நேற்று ஜூலை 22 அன்று இரவு இரண்டு கொள்ளையர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நொய்டாவை சேர்ந்த ஒருவரின், கைப்பேசியையும், பர்ஸையும் கொள்ளையடித்து தப்பித்து சென்றனர். ஆனால் மறுபடியும் அவரிடமே ATM அட்டையின் ரகசிய எண்ணைக் கேட்க முடிவு செய்து திரும்பி வந்ததால் போலிஸாரிடம் மாட்டிக்கொண்ட குபீர் சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளதாக பிரஸ் டிரஸ்ட் ஆஃப் இந்தியா செய்தி தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் நொய்டா DCP ஹரிஷ் சந்தர் கருத்துப்படி, கொள்ளையர்கள் முதலில் ரூ .3,200 ரொக்கம் மற்றும் அவரது ATM கார்டு இருந்த ஒருவரின் கைப்பேசி மற்றும் பர்ஸை திருடிய பின்னர் தப்பி ஓடிவிட்டனர். சிறிது தூரம் சென்ற பிறகு அவர்கள் திரும்பி வந்து, அவரிடம் ATM ரகசிய எண் கேட்டார்கள், பின்னர் மீண்டும் தப்பி ஓடினர்.

பர்ஸை இழந்தவர் உடனடியாக குற்றத்தை போலீசாரிடம் புகார் செய்தார், பின்னர் அதிகாரிகள், குற்றவாளிகளை கைது செய்ய பாதுகாப்பு தடுப்புகளை அமைத்தனர்.

இறுதியில் அவர்கள் ஒரு சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர், ஆனால் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பி ஓட முயன்றனர். எனவே போலீசார் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவரும் காயமடைந்தனர். பின்னர் போலீசார் அவர்களைக் கைது செய்தனர். அவர்கள் இப்போது உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Source: India Today

Next Story