Kathir News
Begin typing your search above and press return to search.

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்! பாகிஸ்தானியர்கள் அட்டூழியம்!!

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்! பாகிஸ்தானியர்கள் அட்டூழியம்!!

லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல்! பாகிஸ்தானியர்கள் அட்டூழியம்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Sep 2019 5:56 AM GMT



ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 ஆவது சட்டப்பிரிவை நரேந்திர மோடி அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. அத்துடன் அந்த மாநிலமானது ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.


இந்தியாவின் உள்விவகாரமான இந்த நடவடிக்கைகளுக்கு, உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுக்கு ஆதவளித்துள்ளன. முஸ்லிம் மத அடிப்படையில் அரசு நாடுகள் பாகிஸ்தான் பக்கம் நிற்கும் என்று பாகிஸ்தான் நம்பியது. அதுவும் நடக்கவில்லை. அதோடு முஸ்லிம் நாடுகளும் இந்தியாவின் பக்கமே நிற்கின்றன.


காஷ்மீர் விஷயத்தில் தனித்துவிடப்பட்ட பாகிஸ்த்தான், இந்தியாவுக்கு எதிராக பல்வேறு போராடங்களை நடத்தி வருகின்றன. பாகிஸ்தானுக்கு உள்ளும், பாகிஸ்தானுக்கு வெளியே இந்திய தூதரங்கள் முன்பும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, பாகிஸ்தானியர்கள் நேற்று திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசுக்கு எதிராக கோஷமிட்ட அவர்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். தூதரக அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


இந்த வன்முறைப் போராட்டத்திற்கு லண்டன் மேயர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News