பிரதமர் மோடிக்காக விளக்கேற்றிய கிரிக்கெட் வீரர் முகமது கைஃபை தாக்கும் பழமைவாதிகள்!
பிரதமர் மோடிக்காக விளக்கேற்றிய கிரிக்கெட் வீரர் முகமது கைஃபை தாக்கும் பழமைவாதிகள்!

கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரு போராட்டத்திற்காக மக்களை ஓன்று படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் மோடி நேற்று விளக்கொளி ஏற்றும்படி பொது மக்களை கேட்டுக் கொண்டார்.
நாடு முழுவதும் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நேற்று இரவு 9 மணிக்கு இதை கடைபிடித்தனர். இந்த நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் நேற்று பிரதமர் கோரியபடி நேற்று தனது இல்லத்தில் விளக்கேற்றினார். இதை சமூக ஊடகங்களில் புகைப்படத்துடன் கூறினார். சோதனையான காலகட்டத்தில் தங்கள் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இது பிடிக்காத இஸ்லாமிய பழமைவாத வாலிபர்கள் பலர் இன்ஸ்டாகிராம் உட்பட அனைத்து சமூக ஊடகங்களிலும் வறுத்தெடுத்து வருகின்றனர். என்ன இருந்தாலும் நீ ஒரு முஸ்லிம்.. நீ விளக்கேற்றி இருக்கக் கூடாது, மசூதிக்கு வந்து கொரோனாவுக்கு எதிராக நமாஸ் தான் செய்திருக்க வேண்டும்.. அதுவும் நேற்று பாஜக தோற்றுவித்த நாள், அந்த நாளில் நீ எப்படி பிரதமர் கேட்டுக் கொண்டார் என்பதற்காக விளக்கேற்றலாம். நீ பெரிய ஆளாக காரணமே அல்லாதான் .. உன் வேர்களை மறந்து விடலாமா? என்றும் தாக்கி பதிவுகள் இட்டு வருகின்றனர்.
To, all the doctors, medical staff, sanitation workers, govt. employees, police and army personnel, media personnel, bankers, essentials' shopkeepers and all other warriors fighting #COVID19
— Mohammad Kaif (@MohammadKaif) April 5, 2020
We are in your debt and ever thankful. 🙏🏻
Jai Hind! 🇮🇳#9baje9minute #9बजे9मिनट pic.twitter.com/eD3EW1ZISj