Kathir News
Begin typing your search above and press return to search.

இனி எந்த வரலாற்று பிழையும் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது..! அயோத்தி ராமர் கோவிலில் 2000 ஆயிரம் அடி ஆழத்தில் புதைக்கப்படும் "டைம் கேப்சூல்"!

இனி எந்த வரலாற்று பிழையும் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது..! அயோத்தி ராமர் கோவிலில் 2000 ஆயிரம் அடி ஆழத்தில் புதைக்கப்படும் "டைம் கேப்சூல்"!

இனி எந்த வரலாற்று பிழையும் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது..! அயோத்தி ராமர் கோவிலில் 2000 ஆயிரம் அடி ஆழத்தில் புதைக்கப்படும் டைம் கேப்சூல்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  27 July 2020 8:10 AM GMT

ராம் ஜன்மபூமி (ராமரின் பிறப்பிடம்) தொடர்பான வரலாறு மற்றும் உண்மைகளைப்பற்றி எதிர்கால சந்ததிகள் அறிந்து கொள்ள "டைம் காப்ஸ்யூல்" அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கட்டுமான இடத்திற்கு கீழே, சுமார் 2,000 அடி கீழே வைக்கப்படும் என்று ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் தெரிவித்தார்.

குருத்வாரங்கள் பௌத்த மற்றும் சமண கோவில்கள் உட்பட அனைத்து முக்கிய வழிபாட்டுத் தலங்களிலிருந்து மண்ணும், புனித நதிகளில் இருந்து வரும் தண்ணீரும் கொண்டுவரப்பட்டு, 'பூமி பூஜை' தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

"புனித நதிகளில் இருந்து வரும் தண்ணீரும், ராமர் பார்வையிட்ட யாத்ரீக இடங்களிலிருந்து மண்ணும் பூமி பூஜையில் அபிஷேகாவின் போது பயன்படுத்தப்படும்" என்று அறக்கட்டளை உறுப்பினர் கூறினார்.

ராம் கோயில் கட்டுமான பணிகளை ஆரம்பிக்கும் விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அயோத்திக்கு வருகை தர உள்ளார்.

பாஜக தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உட்பட பலருக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட உள்ளது என்று அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ரா தெரிவித்தார்.

சுதந்திர இந்திய வரலாற்றில் இது "மிக முக்கியமான" நிகழ்வாக இருக்கும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டிய அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய், இது தூர்தர்ஷன் மற்றும் பிற சேனல்களால் நேரடியாகக் காண்பிக்கப்படும் என்றார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News