Kathir News
Begin typing your search above and press return to search.

"நாகரா பாணி" கட்டிடக்கலையில் உருபெறும் அயோத்தி ராமர் கோவில் - திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பிரம்மாண்டமாகும் வடிவமைப்பு!

"நாகரா பாணி" கட்டிடக்கலையில் உருபெறும் அயோத்தி ராமர் கோவில் - திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பிரம்மாண்டமாகும் வடிவமைப்பு!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Aug 2020 12:28 PM GMT

அயோத்தியில் கட்ட திட்டமிடப்பட்ட ராம் கோயிலின் வடிவமைப்பு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற உயர்மட்ட தலைவர்களின் முடிவிற்கு பிறகு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது.

பல கோபுரங்கள், தூண்கள் மற்றும் குவிமாடங்களுடன் மூன்று மாடி கல் அமைப்பைக் கொண்டிருக்கும். இந்த கோயில் 161 அடி உயரத்தில் கட்டப்படும் என்று, முதலில் திட்டமிடப்பட்டதை விட இரு மடங்கு பெரியதாக இருக்கும் என்று அதன் கட்டிடக் கலைஞர் தெரிவித்துள்ளார்.

உட்புறங்களில் சிக்கலான செதுக்கல் வேலைபாடுகளுடன் உயரமான குவிமாடங்கள் அமைக்கப்படும்.



கோயில் கட்டடக் கலைஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் சந்திரகாந்த் சோம்புரா, சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ராம் கோயிலை வடிவமைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரது தந்தை பிரபாஷங்கர் சோம்புரா சோம்நாத் கோயிலின் புனரமைப்பை வடிவமைத்து மேற்பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



77 வயதான திரு சோம்புரா, கோவில் கட்டுமான பணிக்கு, "நாகரா பாணி" கட்டிடக்கலை பின்பற்றியதாக கூறினார்.

அதிக பக்தர்களுக்கு இடமளிக்க இரண்டுக்கு பதிலாக ஐந்து குவிமாடங்களைக் கொண்டதாக வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளது. கருவறைக்கு மேல் ஒரு ஷிகாரா அல்லது கோபுரம் கட்டப்படும்.

பிரதமர் மோடி, உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பகவத் உட்பட 'பூமி பூஜை' விழாவுக்கு, 175 ஆன்மீகத் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கோயில் கட்ட மூன்று வருடங்கள் ஆகும் என்று கட்டிடக் கலைஞர் கூறினார்.



Next Story
கதிர் தொகுப்பு
Trending News