500 ரூபாய் காசுக்காக தான் சி.ஏ.ஏ. க்கு எதிராக பேசினேன் அய்யாவழி பாலமுருகனின் பரபரப்பு வீடியோ வெளியீடு!
500 ரூபாய் காசுக்காக தான் சி.ஏ.ஏ. க்கு எதிராக பேசினேன் அய்யாவழி பாலமுருகனின் பரபரப்பு வீடியோ வெளியீடு!

திருநெல்வேலி அய்யாவழி பாலமுருகன் கடந்த சில நாட்களாகவே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, மத்திய - மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்து மேடையில் பேசி வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ஒரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் அவர் குடும்ப சூழ்நிலை காரணமாக 500 ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்டு பேசியதாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மத்திய அரசு தற்போது கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டத்திற்கு சென்று கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், அப்போது மத்திய - மாநில அரசுகள், போலீசார் மற்றும் ஹிந்து இயக்கங்களை சார்ந்த தலைவர்களின் மனம் நோகும்படி பேசியதாகவும், இந்தக் கூட்டத்தில் தான் கலந்து கொண்டால் 'போக்குவரத்து செலவு' 'சாப்பாடு போக' எனக்கு 500 ரூபாய் அவர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்றும், தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தான் சென்றதாகவும், அதுமட்டுமில்லாமல் பஞ்சாயத்து தேர்தல், சட்டமன்றத் தேர்தலில் நின்றால் பயன்தரும் என்ற சுய நலத்திற்காக சென்றதாகவும் கூறியுள்ளார்.
தான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கிறேன், மேலும் இனிமேல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எந்தக் கூட்டத்திலும் தான் கலந்துகொள்ள போவதில்லை, யாரையும் எந்த ஒரு தனி நபரையும் தான் விமர்சிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார்.