Kathir News
Begin typing your search above and press return to search.

பதக்கங்களை குவித்த மல்யுத்த வீராங்கனை தந்தையுடன் பாஜகவில் சேர்ந்தார் !!

பதக்கங்களை குவித்த மல்யுத்த வீராங்கனை தந்தையுடன் பாஜகவில் சேர்ந்தார் !!

பதக்கங்களை குவித்த மல்யுத்த வீராங்கனை தந்தையுடன் பாஜகவில் சேர்ந்தார் !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Aug 2019 11:48 AM GMT


இந்தியா சார்பில் காமென்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கங்களை குவித்த மல்யுத்த வீராங்கனை, பபிதா போகத் தனது தந்தையுடன் சேர்ந்து இன்று பாஜகவில் இணைந்தார்.


பாஜக அலுவலகத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தலைமையில் இந்த சந்திப்பு நடந்தது. அதன்பின்னர் பபிதா போகத்தும், மஹாவீர் போகத்தும் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இது குறித்து பேசிய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கூறுகையில், ‘பபிதா போகத் இந்நாட்டின் இளைஞர்களுக்கு ஓர் உத்வேகம். அவர் பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி.


கட்சியில் இணைந்தாலும் கூட அவர் விரும்பினால் மீண்டும் அவர் விளையாட்டைத் தொடர ஒரு விளையாட்டு மந்திரியாக எனது கடமைகளை செய்ய தயாராக இருக்கிறேன்’ என கூறினார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News