OTTல் வெளியாகிறதா பாலாவின் 'வர்மா' ?
OTTல் வெளியாகிறதா பாலாவின் 'வர்மா' ?

இயக்குனர் பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவான படம் 'வர்மா'. தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேகான இப்படம் தாங்கள் எதிர்பார்த்த தரத்தில் பாலா எடுத்து தராததால் அவர் இயக்கிய பதிப்பையே கைவிட்டுவிட்டு மீண்டும் வேறு இயக்குனரை வைத்து தயாரிக்கவிருப்பதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து அர்ஜுன் ரெட்டியில் இனை இயக்குனராக பணியாற்றிய கிரி சாயா இயக்கத்தில் அப்படத்தினை 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் மீண்டும் தயாரித்தனர்.
துருவ் விக்ரம் மற்றும் இசையமைப்பாளர் ரதன் தவிர இதர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை மாற்றி அப்படத்தினை உருவாக்கினர். ஆனால் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான அப்படம் பெரும் தோல்வியையே தழுவியது.
ஏற்கனவே பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' மூலம் சுமார் 10 கோடி வரை நட்டமடைந்த தயாரிப்பாளர் 'ஆதித்யா வர்மா' மூலம் 7 கோடி வரை நட்டமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த நட்டத்தை விக்ரம் ஈடு செய்து தருவார் என காத்திருந்த தயாரிப்பாளருக்கு ஏமாற்றமே மிஞ்சியதால், பாலா இயக்கத்தில் உருவான 'வர்மா' படத்தினை வெளியிட்டு நட்டத்தில் சில கோடிகளை சரி செய்து கொள்ள திட்டமிட்டுள்ளராம்.
இயக்குனர் பாலா என்றாலே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கும் என்ற காரணத்தால், அதுவும் பாலா அப்படத்தை எப்படி எடுத்திருப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் பார்ப்பார்கள் என்ற கணக்கிலிருக்கும் தயாரிப்பாளர் முதலில் திரையரங்கில் வெளியிடும் முயற்சியில் இருக்கிறாராம். ஆனால் ஆதித்ய வர்மாவே தோல்வியை தழுவியதால் இப்படத்திற்க்கு விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் முக்கியம் தருவது கடினம் என்ற நிலையே நிலவுகிறதாம்.
இதனால் OTTல் இப்படத்தினை வெளியிடும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்களாம். பாலாவின் படம் என்பதால் படத்தின் மொத்த பட்ஜெட்டும் இதன் மூலம் திரும்ப கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு.