பாகிஸ்தானை எதிர்த்து பலுசிஸ்தான் முஸ்லிம்கள் ஜெனிவாவில் ஆர்பாட்டம்!
பாகிஸ்தானை எதிர்த்து பலுசிஸ்தான் முஸ்லிம்கள் ஜெனிவாவில் ஆர்பாட்டம்!

பாகிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய பகுதி பலுசிஸ்தான், இந்த பகுதி 4 மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உள்ள மக்களுக்குப் பாகிஸ்தானில் உள்ள மக்களுக்கும் கலாச்சாரம் மற்றும் பழக்க வழக்கம் ரீதியாகப் பெரிய வித்தியாசங்கள் உள்ளது.
இங்கு வாழும் அனைவரும் முஸ்லிம்களாக இருந்தாலும் பாகிஸ்தானின் மற்ற பகுதிகளில் உள்ள முஸ்லிம்களும், பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அரசு இவர்களை தங்களுக்கு கீழான முஸ்லிம் பிரிவாக கருதி ஒதுக்கி வைத்துள்ளனர்.
இப்பவும் இங்குள்ள பழமையான பலுசிஸ்தான் மக்கள் தங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்றும், பாகிஸ்தானியர்கள் தங்கள் மண்ணின் வளங்களை சுரண்டுவதாகவும், தங்களின் மனித உரிமைகளை நசுக்குவதாகவும், தங்கள் வசிக்கும் பகுதிகளில் புகுந்து இராணுவத்தினர் கற்பழிப்பு மற்றும் கொள்ளைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி வருகின்றனர். தங்கள் இனத்தை இராணுவம் வேட்டை ஆடிவருவதாக கூறுகின்றனர்.
இந்த நிலையில் பாகிஸ்தானிடமிருந்து தங்களுக்கு சுதந்திரம் கிடைத்திடவும், பாகிஸ்தானின் மனித உரிமைகளுக்கு எதிராக நடவடிக்கை கோரியும் பலுசிஸ்தான் ஆதரவாளர்கள் இன்று ஸ்விட்சர்லாந்து நாட்டில் கூடிய 43 வது ஐ.நா மனித உரிமைகள் அமர்வு கூட்டத்தின் போது ஆர்பாட்டம் செய்தனர். ஐக்கிய காஷ்மீர் தேசிய மக்கள் கூட்டணி (UKPNP) தலைவர் நசீர் அசிஸ்கான் தலைமையில் இப்போராட்டம் நடைபெற்றது.